ஒரு கிளிக்கில் மருத்துவர்!

நோய்களைப் பற்றியும் அவற்றைக் குணப்படுத்தல் பற்றியும் எண்ணிட முடியாதளவு இணையத்தளங்கள் உருவாகியிருக்கின்றன. கூகுளாண்டவரிடம் கான்சர் என்று கேட்டால் போதும் 13 கோடி 80 லட்சம் இணைப்புகளை தேடிப்பிடித்துக் கொண்டு வருவார். அதே பாலியலோடு சம்பந்தமாகக் கேட்டால் இதைவிடக் கூடுதலான இணைப்புகளைக் கொண்டுவந்து சேர்ப்பார். அப்படியே இருந்தாலும் கூட, மருத்துவம் சம்பந்தமான இணையத்தளங்கள் தான் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் (என் எச் எஸ்) என் எச் எஸ் டைரெக்ட் என்ற இணையத்தளத்திற்கு ஒரு மாதத்தில் மட்டும் 1 கோடி 50 லட்சம் பேர் வந்து தத்தமது நோயின் அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். ஒரு மருத்துவருடன் கலந்து பேச வெட்கப்பட்டும் பலர் இவ்வாறு செய்வதுண்டு. எது எப்படியாயினும், தமது நோயைத் தாமே கண்டுபிடிப்பதற்கு பலர் முயல்கிறார்கள். அறிகுறிகளை மட்டும் வைத்து நோயைக் கண்டுபிடித்து விடலாம் என்றால் ஒரு மருத்துவரே எதற்கும் தேவையில்லை என்று ஆகிவிடுமே! இப்படிப் பிழையாக நோயைப் புரிந்து கொள்ளும் அபாயம் ஒரு புறம் இருக்க, இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே சரியானவையா?

அண்மையில் நடந்த ஓர் ஆய்வின் படி, எம்மில் 72% பேர் மருத்துவம் சம்பந்தமான விடயங்களுக்கு இணையத்தின் உதவியை நாடியிருக்கிறோம். கூகுளாண்டவர் தேடித்தரும் மருத்துவத் தளங்களில் பெரும்பாலானவை மருந்துற்பத்தி நிறுவனங்கள் நிதி வழங்கி உருவானவை. அங்கு அவர்களது மருந்துகளது விற்பனைக்குத் தான் முதலிடமிருக்கும். நடுநிலையாகத் தகவல்களைத் தருபவையாக அவை இருக்கப் போவதில்லை. அப்படியானால் எவை நல்ல தளங்கள் எனக் கருதப்படலாம்? சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். ஏனையவற்றை நீங்களும் தாருங்கள். பிரிட்டனில் NHS Information Partner என்ற முத்திரை உடைய தளங்கள், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த Health on the Net Foundation வழங்கும் HoN முத்திரை உடைய தளங்கள், அமெரிக்காவின் Utilization Review Accreditation Council வழங்கும் URAC முத்திரை கொண்ட தளங்கள்.

மருத்துவம் சம்பந்தமான 10 இணையத்தளங்கள் இதோ:

1. http://www.nhsdirect.nhs.uk/
நோயின் அறிகுறிகள், சோதனைகள், சிகிச்சை போன்ற பல தரப்பட்ட விடயங்களைக் கொண்டுள்ள ஒரு தளம்.

2. http://www.netdoctor.co.uk/
விளம்பரங்களின் உதவியுடன் நடத்தப்படும் ஒரு சிறந்த தளம். மனம் சம்பந்தமான பிரச்சினைகளையும் இலகுவாகப் படிக்கக் கூடியவகையில் இது தருகிறது.

3. http://www.medicineplus.gov/
அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவத் தளங்களில் முக்கியமானதொன்று. தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்கள் முதல் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தரப்பட்டிருக்கும் நோய் சம்பந்தமான தகவல்கள் வரை இந்தத் தளம் பலவாறு உதவுகிறது.

4. http://www.childrenfirst.nhs.uk/
குழந்தைகளுக்கான Great Ormond Street மருத்துவ நிலையத்தின் இணையத்தளம் இது. குழந்தைகளுக்கு வரும் நோய்கள் அவற்றின் சிகிச்சைகள் போன்றவற்றை இந்தத் தளம் விவரிக்கிறது.

5. http://www.cancerbackup.co.uk/
புற்று நோய்கள், அவற்றின் சிகிச்சைகள் மற்றும் அவை சம்பந்தமான பல தகவல்கள் அடங்கிய 4000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது இந்தத் தளம்.

6. http://www.cancerresearchuk.org/
The Cancer Research UK என்ற அற நிறுவனத்தின் இணையத்தளம். புற்று நோய் சம்பந்தமான பல தகவல்களுடன் தற்போது நடந்துவரும் ஆராய்ச்சிகளின் விபரங்களையும் இது தருகிறது.

7. http://www.allergyuk.org/
அலர்ஜி சம்பந்தமான பல நடுநிலையான தகவல்களை இந்த இணையத்தளம் கொண்டுள்ளது.

8. http://www.mayoclinic.com/
அமெரிக்காவின் புகழ் வாய்ந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க இணையத்தளம். இணையக்கருவிகள் நிறைந்த ஒரு தளம்.

9. http://www.webmd.com/
மதிப்புமிக்க இன்னொரு பாரிய அமெரிக்க இணையத்தளம். நோயின் அறிகுறிகளைப் பார்ப்பதற்கென வடிவமைக்கப்பட்ட அசைந்தாடும் கருவி கொண்ட தளம் இது.

10. http://www.quackwatch.org/
இன்னோர் அமெரிக்கத் தளம். கள்ள மருத்துவர்களையும் அவர்தம் சிகிச்சை முறைகளையும் தோலுரித்துக் காட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்டது இந்தத் தளம்.

மேலும் நல்ல தளங்கள் பல உள்ளன. நீங்களும் இந்தப் பட்டியலுக்கு மேலும் பல தளங்களைச் சேருங்களேன்.

7 :

  1. Wow!!

    Excellent Work!!

    Thanks Vaisa!!

  2. "இப்படி பல நல்ல தளங்கள் இருக்கையில், நீயெல்லாம் ஏன் தனி ப்லாக் போட்டு எங்களை இம்சைப்படுத்தறே" எனக் கேட்கிறீர்களா, வைசா!

    :))))

    உபயோகமான தகவல்!

  3. நல்ல பதிவு வைசா. என் அனுபவத்தில் சில நடுநிலைமையான மற்றும் நல்ல தகவல் தளங்கள்:

    http://www.medscape.com
    http://www.medlineplus.gov
    http://www.aap.org (குழந்தை நலத்துக்கு)
    http://www.americanheart.org (இருதயத்துக்கு)
    http://www.obgyn.net (பெண்களுக்கு)
    http://www.cdc.gov (Centers for Disease Control & Prevention)

    இப்படி இன்னும் பல உள்ளன. (உங்கள் பிளாக்கில் ஜஸ்டிபிகேஷன் சரிசெய்யவேண்டுமென்று நினைக்கிறேன் - ஃபையர்ஃபாக்ஸில் சரியாகத் தெரியவில்லை)

  4. தமிழ்மணம், தேன்கூடு உதவிப்பக்கங்களில் பாருங்கள். எந்தத் தளத்தில் என்று நினைவில்லை, ஆனால் இதற்கென்றே ஒரு உதவிப் பக்கம் வைத்திருக்கிறார்கள். ஆமாம், IE-யில் சரியாகத் தான் தெரியும், ஆனால் Firefox-இல் சரியாகத் தெரியாது. எங்களைப் போன்றவர்கள் அதை நகலெடுத்து நோட்பேடில் ஒட்டி வாசிக்கவேண்டும்.

  5. வைசா,

    எந்த விதாமான அலைண்மெண்ட் இருந்தாலும் IEல் சரியாகத் தெரியும். ஆனால் அலைண்மெண்ட் ஜஸ்டிபைடாக இருந்தால் பயர்பாக்ஸில் சரிவரத் தெரிவதில்லை. அதனை லெப்ட் அலைண்டாக மாற்றினால் சரியாகத் தெரியும். செய்வீகர்கள் என நம்புகிறேன்.

  6. வைசா!
    நல்ல தகவல்கள்! எனினும் நான் வைத்தியரிடம் நேரே செல்லத்தான் விரும்புகிறேன். மேலும் சிலசமயம் எனக்கு நோய்கள் பற்றிய அறிகுறிகளை வாசித்தால்; அந்த அறிகுறி இருப்பது போல தோற்றப் பாடிருப்பதால்; படிப்பது மிகக் குறைவு.வீண் மனவுளைச்சல்..
    யோகன் பாரிஸ்

  7. //இதுவும் பிரச்சனையைத் தீர்க்கவில்லையானால் சொல்லுங்கள்//

    http://vaisasview.blogspot.com
    சென்று பார்த்தேன். இன்னும் சரியாகத் தெரியவில்லை. என்னுடைய Firefox version 2.0.0.1