2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே லண்டனின் பாதாள ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. அப்படி ஒரு பாரிய சோகத்துடன் தான் இந்த லண்டன் ஒலிம்பிக் பயணம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு 240 கோடி பவுண்டுகள் தேவை என்று கணக்கு வைத்து அரசாங்கமும் இதற்கு ஒப்புக்கொண்டு அதை விண்ணப்பத்தில் இவர்கள் போட்டு லண்டன் தெரிவாகிவிட்டது.

ஆனால் குறைந்தது 330 கோடி பவுண்டுகளாவது தேவை என்று இப்போது அரசாங்கமே ஒப்புக்கொண்டுவிட்டது. பத்திரிகைகளோ இந்தப் போட்டிகள் நடத்தி முடிக்கப்படுகின்றபோது செலவு 1000 கோடி பவுண்டுகளைத் தாண்டிவிடும் என்கின்றன.
அதை விடுங்கள். இந்த நிலையில் சுமார் 4 லட்சம் பவுண்டுகள் செலவில் இந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஒரு சின்னத்தை வடிவமைத்துள்ளார்கள். ஒரு சின்னத்திற்கு இவ்வளவு செலவா என்பதை விட்டுத் தள்ளுங்கள். அப்படி இவ்வளவு செலவில் மிக அழகான் சின்னம் வெளிவந்திருக்கிறதா என்றால்.....?
இந்தச் சின்னத்தைக் கிண்டல் செய்து ஒரு பத்திரிகையில் அதன் வாசகர்கள் உருவாக்கிய சின்னங்களில் சில இதோ:
இன்னுமொரு பத்திரிகை இதற்கு மாற்றாக ஒரு சின்னத்தை வடிவமைக்கும்் போட்டி ஒன்றை நடத்தி மாற்றுச் சின்னம் ஒன்றைத் தெரிந்தெடுத்துள்ளது. வெற்றி பெற்றவை இவை:

படங்கள் நன்றி: thelondonpaper, London Lite