பெற்றோரின் கவனத்துக்கு....

சில மாதங்களுக்கு முன், இங்கு இங்கிலாந்தில் ஓர் எட்டு வயதே நிரம்பிய சிறுமி தனக்குத் தானே தூக்கு மாட்டி இறந்து போனாள். இந்தத் துயர சம்பவத்தை விசாரணை செய்த பொலீஸார் அவளது அறையை சோதனை செய்த போது சில விடியோக்களும் டிவிடிக்களும் சிக்கின. அவற்றில் ஒன்று "Girl Interrupted". இதைப் பார்த்ததும் பொலீஸாருக்கு அதிர்ச்சி. இந்தப் படம் எப்படி இவள் கைக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் வரும் ஒரு கதா பாத்திரம், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறது. பாவம் இந்த சிறுமி. எதைப் பார்த்தாலும் அதை அப்படியே திரும்ப செய்து பார்க்கும் பருவம். இதையும் செய்து பார்த்து மாண்டு போனாள்.
தற்செயலாக நடந்த இறப்பு என்று தீர்மானிக்கப் பட்டிருப்பினும், இது உண்மையிலேயே தற்செயலாக நடந்தது தானா? வயது வந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டால், பொதுவாக அதற்கு அவர்களே பொறுப்பு. ஏனென்றால் அதை அவர்கள் சுயமாக சிந்தித்து அந்த முடிவை நாடியிருக்கிறர்கள். ஆனால் அதுவே சிறார்களாக இருக்கும் போது, அதற்கு அவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? அவர்களால் எது சரி, எது பிழை, என்ன பின் விளைவுகள் வரப் போகின்றன, இப்படி செய்து பார்க்கலாமா கூடாதா என்று எப்படி சிந்திக்க முடியும்? பெற்றொர்கள் இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

இந்தக் கருத்தையே பிரேத பரிசோதனையாளரும் குறிப்பிடுகிறார். "என்ன விடியோக்கள், டிவிடிக்கள் பிள்ளைகள் பார்ப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள் என்பதில் மிகுந்த அவதானம் தேவை", என்கிறார். இந்தச் சிறுமியினுடைய பெற்றோர் அக்கறை எடுத்து அந்த சிறுமி பார்ப்பதற்குக் கொடுத்த டிவிடியின் தணிப்புப் பத்திரத்தைக் கவனித்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. அந்தந்த வயதிற்கேற்ற பத்திரம் கொண்ட படங்களையே பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். இது குறித்த ஒரு விழிப்புணர்வு பெற்றோரி-டையே இருத்தல் அவசியம். மகள்/ன் விரும்புகிறாள்/ன் என்பதற்காகவே அதன் தணிப்புப் பத்திரத்தைப் பார்க்காமலேயே பிள்ளைகளிடம் கொடுக்கும் பெற்றோர்கள் உண்மையாகவே தங்கள் பிள்ளைகளுக்குத் துரோகம் இழைக்கிறார்கள். நல்லதையும் கெட்டதையும் பிள்ளை-களுக்கு எடுத்துக் கூற தவறியவர்களாவார்கள்.

பிரித்தானியாவில் வாழும் தமிழர்களிடம் இந்த கெட்ட பழக்கம் குடி கொண்டிருக்கிறது. அவர்கள் விடியோவிலோ டிவிடியிலோ வரும் படங்களை அப்படியே பிள்ளைகளோடு சேர்ந்திருந்து பார்த்து மகிழுவார்கள். அல்லது அதை பார்க்கச் சொல்லிப் பிள்ளைகளை விட்டு விட்டு தத்தமது வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவர். டிவியே ஒரு பிள்ளை பார்த்துக் கொள்ளும் சாதனம் ஆகிவிடுகிறது. அதில் வரும் படங்கள் பிள்ளைகள் பார்க்கக் கூடியனவா என்ற சிந்தனை இவர்களுக்கு எழுவதில்லை.

இங்கு இயங்கும் தமிழ் டிவி நிறுவனங்களும் இந்த தணிக்கைப் பத்திரத்தை சரியாகப் பின்பற்றுவதில்லை. பிரித்தானிய சட்டதிட்டப் படி சிறார்களுக்குப் பொருத்தமில்லாத நிகழ்ச்சிகளையோ படங்களையோ இரவு 9.00 மணிக்கு முன் ஒளிபரப்ப முடியாது. ஆனால், இந்தத் தமிழ் டிவி நிறுவனங்கள் இதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் இதையும் கவனியாமல் பிள்ளைகளை டிவி பார்க்க விடும் போது அவர்கள் பார்க்கக் கூடாத காட்சிகளையும் காண நேரிடுகிறது. இரவு 9.00 மணிக்கு மேல் டிவி பார்க்க விடும் பெற்றோர்களும் இங்கு இருக்கிறார்கள்.

இவ்வாறு டிவி, டிவிடி, இணையம், கைத்தொலைபேசி, விடியோ விளையாட்டுச் சாதனங்கள் என பல வழிகளில் பிள்ளைகள் வன்முறைக் காட்சிகளையோ பாலியல் காட்சிகளையோ பார்த்து விட வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்.

10 :

  1. நல்ல பதிவுங்க வைசா.

  2. மேலே வாசித்துக்கொண்டு வரும்போது நினைத்தேன், எங்கள் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் கவனிப்பதில்லை என்று. ஆனால், பின் நீங்கள் அதையும் போட்டிருக்கிறியள்.

    கனடாவில், கிட்டடியில் college [காலேஜிற்கு] போய் கண் மண் தெரியாமல் சுட்டார் ஒருவர். அவருக்கு பிடித்தமான video [வீடியோ] விளையாட்டு Columbine Massacre. அது முன்பு அமெரிக்காவில் Columbine என்னும் இடத்தில் இதே போல் ஒருவர் பாடசாலை உணவு அருந்தும் இடத்திற்கு வந்து பலரை சும்மா சுட்டுத் தள்ளினார். அதை வைத்து தயாரித்த வீடியோ விளையாட்டு தான் Columbine Massacre. இதை எல்லாம் ஏன் அரசாங்கங்கள் அனுமதிக்குதோ என்று தெரியவில்லை. இப்படிப் பார்க்கையில், முஸ்லிம் நாடுகளில் பலதை தடை செய்வது ஒரு வகையில் நல்லதற்கென்றே தோன்றுகிறது!

    ______
    CAPital
    http://1paarvai.wordpress.com/
    http://1kavithai.wordpress.com/

  3. ஹாய், உங்கள் கேள்விக்கு பதில், என் பதிவில்...

    வாருங்கள்..

  4. வைசா!
    இன்று "U" ;அத்தாட்சியுடன் வரும் தமிழ்ப்படங்களைப் பெரியவர்கள் கூடப் பார்க்கமுடியுமா???இளஞ் சமுதாயத்துக்குதவாத தெல்லாம் ,நம் தமிழ் தொலைக்காட்சிகள்;கூசாமல் ஒளிபரப்புகின்றன. பூனைக்கு மணிகட்டுவது யார்????(என்னிடம் தமிழ்த் "தொல்லைக் காட்சி" இல்லை)நண்பர்கள் வீட்டில் கண்டது.
    யோகன் பாரிஸ்

  5. வைசா,
    மிகவும் நல்ல பதிவு.
    //"என்ன விடியோக்கள், டிவிடிக்கள் பிள்ளைகள் பார்ப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள் என்பதில் மிகுந்த அவதானம் தேவை", //

    உண்மை. பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகள் எப்படியான வீடியோக்கள் பார்க்கின்றனர் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பார்க்கக் கூடாதவை என்றால் குழந்தைகளை மிரட்டாமல் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

  6. வைசா

    நல்ல பதிவு.

    நன்றி.

  7. நல்ல பதிவு
    அவசியமான பதிவும் கூட.

    1992ல் நடந்த ஒரு சம்பவம். மான்செஸ்டரில் தன் மூன்று வயதுக் குழந்தையுடன் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தாள் ஒரு தாய். சற்றே அந்தப் பக்கம் திரும்பிவிட்டு இந்தப் பக்கம் பார்த்தால் குழந்தையைக் காணோம்.
    பொலீஸார் வந்து CCTV பதிப்புகளைப் பார்த்தபோது, மூன்று 5-8 வயது நிரம்பிய சிறுவர்கள் இக் குழந்தையைக் கூட்டிச் செல்வதைப் பார்த்தார்கள். பாரிய தேடுதல் நடவடிகையின் பின்னர்
    குழந்தையைக் கண்டுபிடித்தனர். அதை அணு அணுவாக சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள் இந்த மூன்று சிறுவர்களும். இவர்கள் இதைச் செய்த ஒரே காரணம் அவர்கள் பார்த்த விடியோக்களும் விடியோ விளையாட்டுகளும் தான்.


    இந்தச் சம்பவம் பற்றி அப்போதே நான் கேள்விப் பட்டேன்.
    எல்லோரையும் உலுக்கிய ஒரு சம்பவமாக அது அப்போது இருந்தது:

  8. இதுவும் நல்ல பதிவு வைசா. Capital Z பதில் கண்டு தான் Columbine ஒரு வீடியோ விளையாட்டாக இருக்கிறதென்பதையும் அறிந்தேன். அமெரிக்காவில் மிக மோசமான பள்ளிக்கூடக் கொடூரம் அது. (Columbine High School, Littleton, Colorado)

  9. //ஹாய், உங்கள் கேள்விக்கு பதில், என் பதிவில்...//

    என்று செந்தழலார் கூறியிருக்கிறார். அவர் பதிவில் தேடினேன், பிடிக்கமுடியவில்லை. லிங்க் இருக்கிறதா?

  10. இந்த விழிப்புணர்வு பற்றி, எனது 'பாலியல் கல்வி-பெற்றோருக்கு' தொடரில் சற்று விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

    பெற்றொரின் கடமை இவர்களின் வளரும் வயதில் மிகவும் இன்றியமையாதது.

    இப்படிச் செய்ய முடியாதவர்கள், பிள்ளை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்தலே நலம்!

    அனைத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் ஆர்வம் உள்ள வயதில் எதைக் கொடுக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும் பெற்றவர்கள்!