சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தவை

கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த முதல் பத்து இடங்களில் ஒன்பது லண்டனில் அமைந்துள்ளன. முதல் 20 இடங்களை எடுத்துக் கொண்டால், 14 இடங்கள் லண்டனில் இருக்கின்றன. ஜூலை 07 குண்டு வெடிப்புக்குப் பின்னர் தளர்ந்து போய் இருந்த சுற்றுலாப் பயணிகள் வருவை கடந்த ஆண்டு மீண்டும் நல்ல நிலைக்கு வந்துள்ளது.
2 கோடி 80 லட்சம் பேர் லண்டனின் முக்கிய இடங்களுக்கு கடந்த ஆண்டிலே போய் வந்திருக்கிறார்கள்.


Blackpool Pleasure Beach


Tate Modern


The British Museum


முதல் 20 இடங்கள் பற்றிய விபரங்களும் இதோ:

1Blackpool Pleasure beachதெற்கு இங்கிலாந்து5,730,000இலவசம்
2Tate Modernலண்டன்4,915,000இலவசம்
3British Museumலண்டன்4,837,878இலவசம்
4The National Galleryலண்டன்4,562,471இலவசம்
5Natural History Museumலண்டன்3,754,496இலவசம்
6Science Museumலண்டன்2,421,440இலவசம்
7Victoria and Albert Museumலண்டன்2,372,919இலவசம்
8Tower of Londonலண்டன்2,084,468
9St Paul’s Cathedralலண்டன்1,626,034
10National Portrait Galleryலண்டன்1,601,448இலவசம்
11Tate Britainலண்டன்1,597,000இலவசம்
12National Maritime Museumலண்டன்1,572,310இலவசம்
13Kew Gardensலண்டன்1,357,522
14Edinburgh Castleஸ்கொட்லாந்து1,213,907
15British Libraryலண்டன்1,182,393இலவசம்
16Chester Zooவடமேற்கு இங்கிலாந்து1,161,922
17Eden Projectதென்மேற்கு இங்கிலாந்து1,152,332
18Canterbury Cathedralதென்கிழக்கு இங்கிலாந்து1,047,380
19Westminster Abbeyலண்டன்1,028,991
20Roman Baths & Pump Room, Bathதென்மேற்கு இங்கிலாந்து986,720


(படங்கள் இணையத்திலிருந்து)

8 :

  1. ஆமாம் இந்த 20 இடங்களை பார்க்க, சுமாராக எவ்வளவு நாள் ஆகும்?

  2. வைசா,

    நல்ல பதிவு!

  3. வைசா!
    சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடம் லண்டனில் இருப்பதற்கு, லண்டன் தலைநகராக இருப்பதே!!காரணம். பிரயாணம்; அத்துடன் எனையவசதி; வேறு விடயமாக வரும் போது கூட பெரும் சிரமமின்றி
    பார்த்துச் செல்லக் கூடிய வசதி;காரணமென நான் கருதுகிறேன்.

  4. நன்றி குமார். லண்டனில் இந்தப் பதிவில் தரப்பட்டதை விட நிறைய இடங்கள் பார்ப்பதற்கு இருக்கின்றன. இதிலுள்ள லண்டன் இடங்களைப் பார்ப்பதற்கு சுமார் ஒரு வாரம் தேவைப்படும். ஏனைய பகுதிகளுக்குப் போவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் - லண்டனுக்குள் மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்காதீர்கள் ;-). மொத்தம் இரு வாரங்களாவது வேண்டும். இது வேறு ஒன்றுமே செய்யாமல் இந்த 20 இடங்களுக்குப் போய் வர மட்டுமே.

    நன்றி சிவபாலன்.

    வைசா

  5. // சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடம் லண்டனில் இருப்பதற்கு, லண்டன் தலைநகராக இருப்பதே!!காரணம். //

    உண்மைதான் யோகன். பிரிட்டனைப் பொறுத்தவரையில் எல்லாமே லண்டனை மையமாக வைத்துத்தான் இயங்குகின்றன. அதிருக்கட்டும். நீங்கள் லண்டனுக்கு வந்தபோது இந்த 20 இடங்களில் எந்தெந்த இடங்களுக்குப் போனீர்கள், யோகன்?

    வைசா

  6. என்னங்க, பாதி இடங்களுக்கு மேல் இலவசமா!? ஆச்சரியமா இருக்கு?

    அமெரிக்காவுல 20-25 $ வாங்கிருவானுங்க.... அதுவும், ஒண்ணும் இல்லாத விசயத்த, "பெருசா படம் காண்பிப்பானுங்க".

    செய்திக்கு நன்றி!

  7. வாங்க தென்றல்.

    அமெரிக்காவிலேயே அவ்வளவு என்றால் இங்கே எவ்வளவு அறவிடுவார்கள்! அப்படித்தான் முன்பு இருந்தது - தொழிற்கட்சி ஆட்சிக்கு வரும் வரைக்கும். 1997ல் ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி, அரச மானியங்கள் பெற்றுவந்த பல காட்சியகங்களை இலவசமாக்கியது. காரணம் ஏழை சிறுவர்களும் இத்தகைய பயனுள்ள இடங்களுக்குப் போவதை ஊக்குவிக்கவேண்டும் என்பதே. வாழ்க டோனி பிளையர் :-O.

    வைசா

  8. வைசா!
    நல்ல கேள்வி! நான் 8;9;18;19 தவிர எதுவும் செல்லவில்லை;ஆனால் உங்கள் பதிவைப் படித்தபின் WHY NOT எனும் எண்ணம் வந்துள்ளது.
    நான் லண்டன் வந்து உறவு,நண்பர், ஓய்வு எனக் காலம் கழிந்துவிடுவதுடன், அடுத்த தடவை எனத் தள்ளிப் போவதே உண்மை; அத்துடன் இதில் ஆர்வமுள்ளவர்
    கூட்டும் கிடைக்க வேண்டும்.