பெண்ணின் புத்திசாலித்தனம்

மின்னஞ்சலில் வந்த ஒரு ஜோக் இது. இதற்கும் எனது கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! தமிழாக்கம் மட்டும் தான் என்னுடையது.


ஒரு பெண் கால்ஃப் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு முறை அவள் அடித்த பந்து மரங்களுக்கிடையில் போய் விழுந்து விட்டது. பெண்மணியும் விடாமல் தனது பந்தைத் தேடிக் கண்டுபிடித்தாள். அப்போது அங்கு பந்துக்குப் பக்கத்தில் ஒரு தவளையை அவள் கண்டாள். பார்க்கவே அருவருப்பான தோற்றமுடையதாக அந்தத் தவளை இருந்தது. முகத்தைச் சுழித்துக் கொண்டாள் நமது நாயகி. பந்தை அடிப்பதற்கு அவள் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிசயம் நடந்தது.


தவளை பேசத் தொடங்கியது. "நான் ஒரு பூதம். ஏதோவொரு சாபத்தால் இப்படித் தவளையாகி விட்டேன். எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடு. நான் பழைய நிலைக்கு மாறிவிடுவேன். அதன் பின்னர், நீ கேட்கும் மூன்று வரங்களை நிறைவேற்றி வைக்கிறேன்" என்றது தவளை. இவளும் யோசித்துப் பார்த்தாள். "அருவருப்பாகவே இருந்தாலும், அது சொல்வது உண்மையோ பொய்யோ என்று தெரியாவிடினும், ஏதோ செய்வோம். நான் எதை இழந்து விடப் போகிறேன்" என்று சிந்தித்து விட்டு, அந்தத் தவளையை எடுத்து ஒரு முத்தம் கொடுத்தாள்.





அவ்வளவுதான்! அந்தத் தவளை பூதமாக மாறியது. "நீ விரும்பும் மூன்று வரங்களையும் கேள். நிறைவேற்றி வைக்கத் தயாராக இருக்கிறேன்" என்றது பூதம். "ஆனால் ஒரு நிபந்தனையைக் கூற மறந்துவிட்டேன். நீ கேட்கும் ஒவ்வொன்றும் பத்து மடங்காக உனது கணவனுக்கும் கிடைக்கும்".அந்தப் பெண் சிறிது நேரம் யோசித்தாள். பின்னர் தவளையிடம், "இந்த உலகிலேயே மிகச் சிறந்த அழகியாக நான் மாற வேண்டும்" என்றாள். "நன்றாக யோசி. உனது கணவன் உலகிலேயே மிகச் சிறந்த அழகனாவான்" என்று கேட்டபடியே பூதம் அவளை நன்றாக உற்றுப் பார்த்தது. "அவர் எனது கணவனல்லவா? அவர் சிறந்த அழகனாக இருந்தால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி!" என்று அவள் பதிலளித்தாள். அடுத்த கணம் அவள் மிகச் சிறந்த அழகியானாள்.


"உனது இரண்டாவது வரம் என்ன?" என்று கேட்டது பூதம். சற்றும் தயக்கமில்லாமல், "உலகிலேயே மிகுந்த பணக்காரியாக என்னை மாற்று" என்றாள். "மறந்து விடாதே. இதன் மூலம் உனது கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக இருப்பான்!" தவளை நிபந்தனையை மீண்டும் நினைவூட்டியது. "இதில் என்ன இருக்கிறது? என்னிடம் இருப்பதில் பாதி அவருக்கு, அவரிடம் இருப்பதில் பாதி எனக்கு அல்லவா?" அடுத்த நொடியில் அவள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரியானாள்.


"அடுத்த வரம்?" தூண்டியது அந்த பூதம். நமது நாயகி முகத்தில் புன்னகை. "எனக்கு மெலிதாக மாரடைப்பு வர வேண்டும்" என்றாள்.




பெண்களுக்கு
பயங்கர மாரடைப்பில் கணவன் காலியாகிவிட மிக அழகியாகவும் மிகப் பெரிய பணக்காரியாகவும் நீண்ட காலம் சந்தோஷமாக அவள் வாழ்ந்தாள்.
இந்தக் கதையின் நீதி: பெண்கள் எதைச் செய்தாலும் புத்திசாலித்தனமாகச் செய்வார்கள்!
பெண்களே, இத்துடன் இந்தக் கதையை வாசிப்பதை நிறுத்தி விடுங்கள்.



ஆண்களுக்கு:
உண்மையில் அவளது கணவனுக்குப் பத்து மடங்கு மெலிதான மாரடைப்புத் தான் வந்தது. அதை அவன் உணரக் கூட இல்லை.
இந்தக் கதையின் நீதி: பெண்கள் புத்திசாலித்தனமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு அதற்கு எதிமாறாக நடந்து கொள்வார்கள்!
பெண்களே, இப்போதும் இதை வாசிக்கிறீர்கள் என்றால், மற்றவர் சொல்வதை நீங்கள் காதில் வாங்கிக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை உறுதி செய்கிறீர்கள் என்று அர்த்தம்!



(படம் இணையத்திலிருந்து)

12 :

  1. cha...pootham koodava nambikaithurukam seiyuthu? sona sollai kaapatha theriyella poothathuku!

  2. அது மெல்லிய மாரடைப்பு என்பதால்,அவளை விட பத்து மடங்கு மெல்லியதாக வந்து அவன் தப்பித்துக் கொண்டான்.இருந்தாலும் அவள் ஏன் அப்படிக் கேட்டாள் என்று விளங்கவில்லை.இப்படியும் பெண்கள் இருப்பார்களா?

  3. ரசிக்கவில்லைங்க அந்த பெண் செய்தது.எங்கு பிடித்தீர்கள் இந்த கதையை?

  4. உங்கள் தள பக்கம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
    அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்!!!
    ஹி! ஹி! ஹி!

  5. oh antha "meliya" enbathai nan kavanikavilai!

  6. Vaisa!,

    Nice one!!

    Thanks.

  7. அப்படி போடுங்க அருவாளை

  8. நான் இதை வாசிக்கவில்லை! படம் சகிக்காததால் படத்தைப் பார்த்துவிட்டு ஓடிவிட்டேன் ;-)

  9. வைசா!
    ரசிக்கக் கூடிய கதை! தேடியிட்டதற்கு நன்றி!

  10. சிநேகிதி,
    மொழிபெயர்ப்பில் ஒன்றும் தொலைந்து போய்விடவில்லையே?

    கண்மணி,
    நான் நினைக்கிறேன், இது மேற்கத்தைய ஜோக். அவர்களது சிந்தனையில் இவ்வாறு தோன்றக் கூடும். முக்கியமாக, மனதுக்குப் பிடிக்காத ஒரு கணவனிடமிருந்து அதிகூடிய நன்மைகளுடன் விலகுவதாக இருக்கக் கூடும்.

    ரசிக்கலையா சூர்யா. சரி விடுங்க.

    நன்றி சிநேகிதி, கண்மணி, சூர்யா.

    வைசா

  11. மாசிலா,
    இந்த நக்கல் தானே வேணாங்கிறது :-)

    நன்றி மாசிலா, சிவபாலன், VeeBee, சேதுக்கரசி, யோகன்.


    வைசா

  12. எனது பதிவுக்கு வந்து பின்னூட்டமும் புதிய புளொக்கரில் சரியாக வேலை செய்கின்றதா என்று சரி பார்க்க உதவியதற்கு நன்றி வைசா. :)

    நகைச்சுவை நன்றாக இருந்தது. :)

    அப்படியே இந்த நகச்சுவையையும் பாருங்கள்.

    ஒரு 50 வயது கணவனுக்கும், 46 வயது மனைவிக்கும் அன்று திருமண நினைவு நாள். அவர்கள் முன்னால் ஒரு தேவதை தோன்றி, "நீங்கள் இருவரும் 20 வருடங்களுக்கு மேல் எந்த பிரச்சனைகளுமின்றி அழகாக குடும்பம் நடத்தியதால், உங்களுக்கு ஆளுக்கொரு வரம் தரப்போகின்றேன். கேளுங்கள்" என்று சொன்னது. முதலில் மனைவி கேட்டார் "எங்களுக்கு பெரிய அழகான வீடும், பணக்காரர்களாக இருக்க பணமும் வேண்டும்" என்று. தேவதையும் "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னது. அவர்களுக்கு வீடு, பணம் எல்லாம் வழங்கப்பட்டது. அடுத்து கணவன் கேட்டார் "என்னை விட 30 வயது குறைவாக எனது மனைவி வேண்டும்" என்று. தேவதையும் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அதை நிறைவேற்றியும் வைத்தது. ஆனால் தான் கேட்டது கிடைத்தும் அந்த கணவன் திரு திரு என விழித்துக் கொண்டு பரிதாபமாக இருந்தார். ஏன்?

    இதோ விடை....
    'உன்னை விட 30 வயது குறைவாக உனது மனைவி வேண்டும். அவ்வளவுதானே' என்று சொல்லி தேவதை கணவரின் வயதை 76 ஆக உயர்த்தி விட்டது.