லண்டன் 2012 - ஒலிம்பிக் சின்னம்

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே லண்டனின் பாதாள ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. அப்படி ஒரு பாரிய சோகத்துடன் தான் இந்த லண்டன் ஒலிம்பிக் பயணம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு 240 கோடி பவுண்டுகள் தேவை என்று கணக்கு வைத்து அரசாங்கமும் இதற்கு ஒப்புக்கொண்டு அதை விண்ணப்பத்தில் இவர்கள் போட்டு லண்டன் தெரிவாகிவிட்டது.


ஆனால் குறைந்தது 330 கோடி பவுண்டுகளாவது தேவை என்று இப்போது அரசாங்கமே ஒப்புக்கொண்டுவிட்டது. பத்திரிகைகளோ இந்தப் போட்டிகள் நடத்தி முடிக்கப்படுகின்றபோது செலவு 1000 கோடி பவுண்டுகளைத் தாண்டிவிடும் என்கின்றன.


அதை விடுங்கள். இந்த நிலையில் சுமார் 4 லட்சம் பவுண்டுகள் செலவில் இந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஒரு சின்னத்தை வடிவமைத்துள்ளார்கள். ஒரு சின்னத்திற்கு இவ்வளவு செலவா என்பதை விட்டுத் தள்ளுங்கள். அப்படி இவ்வளவு செலவில் மிக அழகான் சின்னம் வெளிவந்திருக்கிறதா என்றால்.....?


இந்தச் சின்னத்தைக் கிண்டல் செய்து ஒரு பத்திரிகையில் அதன் வாசகர்கள் உருவாக்கிய சின்னங்களில் சில இதோ:



உணர்வின் பிரதிபலிப்பு




பிரிட்டன் வரைபடம்!




பாலைவனத்தில் ஒட்டகம்




பேஸ்பால் ஆட்டக்காரர்




நீச்சலடிக்கும் வாத்துகள்




காண்டாமிருகம்



இன்னுமொரு பத்திரிகை இதற்கு மாற்றாக ஒரு சின்னத்தை வடிவமைக்கும்் போட்டி ஒன்றை நடத்தி மாற்றுச் சின்னம் ஒன்றைத் தெரிந்தெடுத்துள்ளது. வெற்றி பெற்றவை இவை:




படங்கள் நன்றி: thelondonpaper, London Lite

8 :

  1. மாற்றங்கள் நிகழும் போது எதிர்ப்புகள் வருவது இயல்பே. சின்னம் உருவாக்குவது ஒன்றும் இலகுவான வேலையில்லை. ஒரு மிகச் simple ஆன சின்னம் ஒன்றை உருவாக்குவது அதை விடக் கடினமானது. அழகு - அற்புதம் என்பவற்றுக்கும் அப்பால், ஒரு சின்னம் அனைவரையும் சென்றடையவேண்டும் என்கிற நோக்கம் உள்ளது. ஒலிம்பிக் போட்டி என்பது உலகளாவிய போட்டி. அனைத்து இனக்குழுமங்களும், அனைத்து வயதினரும் சின்னத்தை உள்வாங்கவேண்டிய தேவையுள்ளது. ஒலிம்பிக்கின் அனைத்து Corporate Design, Corporate Identity, Corporate Communication சார்ந்த வேலைகளுக்கும் இது பொருந்தக் கூடியதாக இருக்கவேண்டும். சிலர் நக்கல் பண்ணுவதைப் போன்று 10 நிமிட வேலையில்லை இது. இந்தச் சின்னத்தை வரைவதற்கு ஒரு நிமிடம் (அல்லது அதனிலும் குறைவான நேரம்) போதுமானதாக இருக்கலாம் - ஆனால் இதற்கான வேலைத்திட்டம் நீண்ட காலத்தையும், நீண்ட ஆய்வையும் உள்ளடக்கியது என்பதை பலர் உணர்ந்துகொள்வதில்லை.

    அத்தோடு, இலண்டன் 2012 இன் போது Olympic மற்றும் Paraolympic ஆகிய இரண்டுக்கும் முதன்முறையாக ஒரே சின்னம் பயன்படுத்தப்பட இருக்கிறது என்பதும் கவனத்தில்கொள்ளவேண்டியது.

    வழமையான ஒலிம்பிக் சின்னங்களிலிருந்து இந்தச் சின்னம் மாறுபட்டதாக இருக்கிறது. இதுரை நடந்த ஒலிம்பிக் சின்னங்களை அவதானித்தீர்கள் என்றால் - பெரும்பான்மையான சின்னங்களில் வளைவுகள் இருக்கும். ஆனால், இலண்டன் சின்னத்தில் வளைவுகளே இல்லை. modern மற்றும் dynamic தன்மைகள் இந்தச் சின்னத்தில் இருக்கிறது. இதன் நிறம் கூட வித்தியாசமானதே.

    - அருண்

  2. வைசா!
    உண்மையில் அரச தேர்வு குப்பையே!
    தனியார் தேர்வில் 2 ம் இடத்துக்கு நான் முதலாம் இடம் கொடுப்பேன்.
    தகவலுக்கு நன்றி

  3. முதலில் இருந்த சின்னம் இங்கு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது,என்னை அவ்வளவாக கவரவில்லை.
    இப்போது கீழே உள்ளது கண்னை கவரும் விதம் இருக்கிறது.

  4. நன்றி அருண்.

    இந்த சின்னத்தின் வடிவமைப்புக்கு எவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்கும் என்பதிலோ எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்பதிலோ மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதன் வடிவமைப்பு அந்நாட்டு மக்களை ஈர்த்துத் தன்னோடு அரவணைத்துச் செல்லக் கூடியதாக இருக்கவேண்டும். பல்லாயிரக் கணக்கான மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் ஒன்று இந்தப் போட்டிக்கு மக்களின் ஆதரவை எப்படி ஈர்க்கப்போகிறது?

    இந்தச் சின்னத்துக்கு எதிராக முக்கியமாக இரண்டு வாதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று இது 80களின் வடிவமைப்பைப் போல் இருக்கிறது; நவீனமாக இல்லை. மற்றையது இது நடக்கும் நகரையோ அல்லது நாட்டையோ அடையாளம் காட்டக்கூடியதாக எதுவுமே இதில் இல்லை.

    இதுவரை பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் மக்கள் இதற்கெதிராகக் கையொப்பமிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மக்களுக்காக நடத்தப்படும் இப்போட்டி மக்களைத் தன்னோடு இழுத்துக் கொள்ளவெண்டும். அந்த அரிய சந்தர்ப்பத்தை லண்டன் குழு தவறவிட்டு விட்டது போல் தோன்றுகிறது.

    வைசா

  5. யோகன், குமார்,

    உங்களைப் போலவே பலருக்கு இந்தச் சின்னம் பிடிக்கவில்லை. ஆனால் சர்வதேச ஒலிம்பிக் குழுவும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது என்பதால், இந்தச் சின்னம் அப்படித் தான் இருக்கப் போகிறது.

    வைசா

  6. :-)

    எனக்குப் பிடித்தது அந்த லண்டன் வீல் இருக்கும் சின்னம்.

  7. நன்றி சேதுக்கரசி. அந்தச் சின்னத்தைத்தான் பத்திரிகையும் முதலாவது என்று தெரிந்தெடுத்துள்ளது. இருந்துமென்ன? ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ள சின்னம் மாறப் போவதில்லையே!

    அது சரி. உங்கள் மௌனம் எப்போது கலையப் போகிறது? :-).

    வைசா

  8. //அது சரி. உங்கள் மௌனம் எப்போது கலையப் போகிறது? :-)//

    முதலில் 2007 என்று நினைத்தேன்.
    பிறகு 2008 என்று நினைத்தேன்.
    இப்போது 2010 என்று நினைக்கிறேன் ;-)

    உண்மையில் எனக்கே தெரியாது :-) ஆர்வமில்லை. அவ்வளவு தான்.