கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த முதல் பத்து இடங்களில் ஒன்பது லண்டனில் அமைந்துள்ளன. முதல் 20 இடங்களை எடுத்துக் கொண்டால், 14 இடங்கள் லண்டனில் இருக்கின்றன. ஜூலை 07 குண்டு வெடிப்புக்குப் பின்னர் தளர்ந்து போய் இருந்த சுற்றுலாப் பயணிகள் வருவை கடந்த ஆண்டு மீண்டும் நல்ல நிலைக்கு வந்துள்ளது.
2 கோடி 80 லட்சம் பேர் லண்டனின் முக்கிய இடங்களுக்கு கடந்த ஆண்டிலே போய் வந்திருக்கிறார்கள்.
2 கோடி 80 லட்சம் பேர் லண்டனின் முக்கிய இடங்களுக்கு கடந்த ஆண்டிலே போய் வந்திருக்கிறார்கள்.



முதல் 20 இடங்கள் பற்றிய விபரங்களும் இதோ:
1 | Blackpool Pleasure beach | தெற்கு இங்கிலாந்து | 5,730,000 | இலவசம் |
2 | Tate Modern | லண்டன் | 4,915,000 | இலவசம் |
3 | British Museum | லண்டன் | 4,837,878 | இலவசம் |
4 | The National Gallery | லண்டன் | 4,562,471 | இலவசம் |
5 | Natural History Museum | லண்டன் | 3,754,496 | இலவசம் |
6 | Science Museum | லண்டன் | 2,421,440 | இலவசம் |
7 | Victoria and Albert Museum | லண்டன் | 2,372,919 | இலவசம் |
8 | Tower of London | லண்டன் | 2,084,468 | |
9 | St Paul’s Cathedral | லண்டன் | 1,626,034 | |
10 | National Portrait Gallery | லண்டன் | 1,601,448 | இலவசம் |
11 | Tate Britain | லண்டன் | 1,597,000 | இலவசம் |
12 | National Maritime Museum | லண்டன் | 1,572,310 | இலவசம் |
13 | Kew Gardens | லண்டன் | 1,357,522 | |
14 | Edinburgh Castle | ஸ்கொட்லாந்து | 1,213,907 | |
15 | British Library | லண்டன் | 1,182,393 | இலவசம் |
16 | Chester Zoo | வடமேற்கு இங்கிலாந்து | 1,161,922 | |
17 | Eden Project | தென்மேற்கு இங்கிலாந்து | 1,152,332 | |
18 | Canterbury Cathedral | தென்கிழக்கு இங்கிலாந்து | 1,047,380 | |
19 | Westminster Abbey | லண்டன் | 1,028,991 | |
20 | Roman Baths & Pump Room, Bath | தென்மேற்கு இங்கிலாந்து | 986,720 |
(படங்கள் இணையத்திலிருந்து)
8 மறுமொழிகள்:
ஆமாம் இந்த 20 இடங்களை பார்க்க, சுமாராக எவ்வளவு நாள் ஆகும்?
வைசா,
நல்ல பதிவு!
வைசா!
சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடம் லண்டனில் இருப்பதற்கு, லண்டன் தலைநகராக இருப்பதே!!காரணம். பிரயாணம்; அத்துடன் எனையவசதி; வேறு விடயமாக வரும் போது கூட பெரும் சிரமமின்றி
பார்த்துச் செல்லக் கூடிய வசதி;காரணமென நான் கருதுகிறேன்.
நன்றி குமார். லண்டனில் இந்தப் பதிவில் தரப்பட்டதை விட நிறைய இடங்கள் பார்ப்பதற்கு இருக்கின்றன. இதிலுள்ள லண்டன் இடங்களைப் பார்ப்பதற்கு சுமார் ஒரு வாரம் தேவைப்படும். ஏனைய பகுதிகளுக்குப் போவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் - லண்டனுக்குள் மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்காதீர்கள் ;-). மொத்தம் இரு வாரங்களாவது வேண்டும். இது வேறு ஒன்றுமே செய்யாமல் இந்த 20 இடங்களுக்குப் போய் வர மட்டுமே.
நன்றி சிவபாலன்.
வைசா
// சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடம் லண்டனில் இருப்பதற்கு, லண்டன் தலைநகராக இருப்பதே!!காரணம். //
உண்மைதான் யோகன். பிரிட்டனைப் பொறுத்தவரையில் எல்லாமே லண்டனை மையமாக வைத்துத்தான் இயங்குகின்றன. அதிருக்கட்டும். நீங்கள் லண்டனுக்கு வந்தபோது இந்த 20 இடங்களில் எந்தெந்த இடங்களுக்குப் போனீர்கள், யோகன்?
வைசா
என்னங்க, பாதி இடங்களுக்கு மேல் இலவசமா!? ஆச்சரியமா இருக்கு?
அமெரிக்காவுல 20-25 $ வாங்கிருவானுங்க.... அதுவும், ஒண்ணும் இல்லாத விசயத்த, "பெருசா படம் காண்பிப்பானுங்க".
செய்திக்கு நன்றி!
வாங்க தென்றல்.
அமெரிக்காவிலேயே அவ்வளவு என்றால் இங்கே எவ்வளவு அறவிடுவார்கள்! அப்படித்தான் முன்பு இருந்தது - தொழிற்கட்சி ஆட்சிக்கு வரும் வரைக்கும். 1997ல் ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி, அரச மானியங்கள் பெற்றுவந்த பல காட்சியகங்களை இலவசமாக்கியது. காரணம் ஏழை சிறுவர்களும் இத்தகைய பயனுள்ள இடங்களுக்குப் போவதை ஊக்குவிக்கவேண்டும் என்பதே. வாழ்க டோனி பிளையர் :-O.
வைசா
வைசா!
நல்ல கேள்வி! நான் 8;9;18;19 தவிர எதுவும் செல்லவில்லை;ஆனால் உங்கள் பதிவைப் படித்தபின் WHY NOT எனும் எண்ணம் வந்துள்ளது.
நான் லண்டன் வந்து உறவு,நண்பர், ஓய்வு எனக் காலம் கழிந்துவிடுவதுடன், அடுத்த தடவை எனத் தள்ளிப் போவதே உண்மை; அத்துடன் இதில் ஆர்வமுள்ளவர்
கூட்டும் கிடைக்க வேண்டும்.
உங்கள் கருத்து என்ன?