உப்புத் தூக்கலாக உள்ள உணவை உட்கொள்வது உடம்புக்குக் கெடுதலை விளைவிக்கும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். மைக்ரோவேவ் உணவுகளைத் தவிர்த்தாலும் கூட, உங்கள் உணவில் உப்பைத் தவிர்த்தாலும் கூட நாளாந்த உப்பு தேவையானதை விடக் கூடுதலாக இருக்க பெருமளவு வாய்ப்பு இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? சத்துள்ள உண்வு என்று நீங்கள் நம்பி வாங்கும் உணவுகளும், சாப்பிடும் போது உப்புத் தெரியவில்லை யெனினும், அளவுக்கதிகமான உப்பைக் கொண்டிருக்கின்றன.

நாம் எல்லோருமே பொதுவாக 75% உப்பை கடைகளில் வாங்கும் தயாரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களூடாகவே பெறுகிறோம். நீங்களே எல்லா உணவுகளையும் தயார்செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் பிஸ்கட்டையோ அல்லது ப்ரெட்டையோ கடையில் வாங்குவீர்கள். இவை அதிகளவு உப்பைக் கொண்டிருக்கக் கூடும்.
உப்பு அதிகமுள்ள உணவு வகைகள்:
- Baked beans
- Biscuits - sweet and savoury
- Breakfast cereals
- Cooking sauces
- Hot chocolate
- Pizza
- Ready meals
- Soup
- Tinned spaghetti
- Tinned vegetables and pulses (with added salt)
உப்பு அதிகமாக இருக்கக்கூடிய உணவு வகைகள்:
- Anchovies
- Bacon
- Cheese
- Chips (if salt added)
- Crisps
- Gravy granules
- Olives
- Pickles
- Pretzels
- Salted and dry roasted nuts
- Salt fish
- Sausages
- Smoked meat and fish
- Soy sauce
- Stock cubes
- Yeast extract

எவ்வளவு உப்பை ஒரு நாளுக்கு நாம் உட்கொள்ளலாம்? 6 கிராம். அதாவது ஒரு தேக்கரண்டியளவு உப்பு! இது ஒரு பெரிய அளவு இல்லை. அதிலும் 75% உப்பு நாளாந்த உணவுகளில் இருக்கிறதென்றால், இந்த அளவு மிகச் சிறியது. இது வளர்ந்தோர்களுக்குத் தான். பிள்ளைகளுக்கு வேறு அளவுகள் உள்ளன. பன்னிரண்டு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு 1 கிராமிலும் குறைவானளவு உப்புத்தான் ஒரு நாளுக்குத் தேவைப்படும். இதைவிடக் கூடியளவு உப்பை அவர்களது கிட்னிகள் சமாளிக்க மாட்டா. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினாலோ அல்லது ஃபோமுலா பால் ஊட்டினாலோ தேவையானளவு உப்பு அவர்களுக்குப் போய்ச் சேரும். மேலதிக உப்பு அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அவர்களது உணவில் உப்புச் சேர்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்று தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருள்களைத் தவிர வேறு உணவுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அம்மாதிரியான உண்வுப் பொருள்களில் அதிகளவு உப்பு இருக்கக் கூடும்.
பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடிய உப்பின் அளவுகள்:
1-3 வயது: ஒரு நாளுக்கு 2 கிராம் உப்பு (0.8 கிராம் சோடியம்)
4-6 வயது: ஒரு நாளுக்கு 3 கிராம் உப்பு (1.2 கிராம் சோடியம்)
7-10 வயது: ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு (2 கிராம் சோடியம்)
11 வயது அல்லது அதற்கு மேல்: 6 கிராம் உப்பு (2.5 கிராம் சோடியம்)
இவை பிள்ளைகளுக்குக் கொடுக்ககூடிய ஆகக் கூடுதலான உப்பின் அளவு. இதை விடக் குறைவாகக் கொடுப்பதே நல்லது. பிள்ளைகளுக்கெனவே தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கூட வாங்குவதற்கு முன் அவற்றிலுள்ள உப்பின் அளவை அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் அதிகளவு உப்பு சாப்பிட்டு வந்தால் அது பிற்காலத்தில் பல உடல்நல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். மேலும், சிறுவயதிலேயே உப்புடன் சாப்பிட்டு ருசிப்பட்டுக் கொண்டால், வளர்ந்த பிறகும் அதிகளவு உப்பை அவர்கள் உட்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதிகளவு உப்புள்ள (அதாவது 100 கிராமில் 1.25 கிராம் அல்லது அதற்குக் கூடுதலானளவு உப்புள்ள) உணவுப் பொருள்களைப் பெருமளவில் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இம்மாதிரியான பதார்த்தங்களை நிறைய சாப்பிடும்போது இலகுவாக 6 கிராமிற்கும் மேற்பட்ட உப்பை நாம் உட்கொண்டு விடுவோம். "மேலதிகமாக உப்புச் சேர்க்காதது" என்று குறிப்பிட்டிருக்கும் உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுங்கள்.
சோடியம் மாத்திரம் ஓர் உணவுப் பொருளில் குறிப்பிடப் பட்டிருந்தால், அந்த அளவை 2.5னால் பெருக்கினால் உப்பின் அளவு கிடைக்கும்.
நினைவிருக்கட்டும். உணவில் உப்பின் அளவைக் குறைக்கும் போது இரத்த அழுத்தம் குறைகிறது. இரத்த அழுத்தம் குறையும்போது இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைகின்றன. உங்களுக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் அதிகம் என்றால், சாப்பாட்டில் உப்பைக் குறைப்பதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தை சில வாரங்களிலேயே குறைத்துவிட முடியும்.
(படங்கள் இணையத்திலிருந்து)
10 மறுமொழிகள்:
உப்புல இவ்வளவு இருக்குதா? உப்பு உப்புன்னு உப்புனா நெஞ்சு கப்புன்னு பிடிச்சிக்கிரும்னு சொல்றீங்க. சரி. கேட்டுக்கிறோம். இந்துப்புன்னு சொல்றாங்களே...கடல்ல இருந்து எடுக்காம நெலத்துல வெட்டி எடுக்குற உப்பு. அதெப்படி? அதுவும் இப்பிடித்தானா?
வைசா!
மிகப் பயனுள்ள கட்டுரை குறிப்பாக அனைவரும் படித்து;முழுக் குடும்பமும் பின்பற்ற வேண்டியவை!
எனக்கு சுமார் 8 வருடங்களுக்கு முன் தலைவலி இருந்தது; பல பரிசோதனையின் பின் உயர் குருதி அழுத்தம் எனக் கண்டு, வைத்தியர் மருந்து எழுதிய போது;அதை ஆயுள் பூராகச் சாப்பிட வேண்டுமென்றார்.
அப்போது அவரிடம் கேட்டேன். இதை விட ஏதாவது இயற்கையாக குறைக்க வழியுண்டா? எனக் கேட்டபோது...ஏன் இல்லை..உப்புச் சாப்பிடுவதை நிறுத்து; அத்துடன் வேலைக்குச் செல்லும் போதும் வரும் போது குறைந்தது 2 நிறுத்தங்களையாவது; நடந்து கடக்க முயலவும் எனக் கூறி..அதைப் பின்பற்றி
இன்று தலைவலி இன்றி இருப்பதுடன்; வைத்தியர் கடைசி குருதிப் பரிசோதனையின் பின் சிறிது உப்பு
சேர்த்துச் சாப்பிடு!! எனக் கூறினார்;
இப்போ ஒரு துளி உப்புப் போட்டால்;எனக்கு அன்று சாப்பாடு அமுதமாக இருக்கும்.
எனவே..;உங்கள் நாக்குக்கு முதல் 0 ,உப்புச் சுவைக்குப் பழக்கப்படுத்துங்கள்; பின் 1 ஆக்குங்கள்;
அமுதத்தை உணர்வீர்கள்..பல நோய்களை விரட்டுவீர்கள்.
ஓம், நீங்கள் சொல்லும் இந்த உப்புள்ள பண்டம் குப்பையில்
போடுவது சரியானது தான்.
ஆனால் நம் முன்னோர் ""உப்பில்லா பண்டம் குப்பை""யிலே என்று
சொன்னது நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான கனியுப்புக்கள்
இல்லாத பண்டங்கள்த்தான்.
வாங்க ராகவன். நல்ல கேள்வி இது. என்க்குப் பதில் தெரியவில்லை. எல்லா உப்புகளும் சோடியம் குளோரட்டைக் கொண்டிருப்பதால் குறைத்துப் பயன்படுத்த வேண்டியது அவசியம். எவ்வளவு உட்கொள்ளலாம் என்பது, அதில் எந்த அளவுக்கு சோடியம் இருக்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.
நன்றி ராகவன்.
வைசா
நல்ல பதிவு. கோஷர் உப்பில் (Kosher salt) சோடியம் குறைவாயிருக்கும் என்று சமீபத்தில் படித்தேன். இணையத்தில் மேலோட்டமாகத் தேடியதில் உறுதியான பதில் வரவில்லை, எனினும் இதைப் பாருங்கள்:
உப்புகளில் சோடியம் அளவு
கோஷர் உப்பு - விக்கிபீடியா
மேலைநாடுகளில் கோஷர் உப்பு கிடைக்கிறது. விக்கிபீடியா சொல்வதைப் பார்த்தால் அது கிட்டத்தட்ட நம்மூர் "கல் உப்பு" தோற்றத்தைக் கொண்டிருக்கும் போலிருக்கிறது! நம்மூரில் கிடைக்கும் "கல்லுப்பில்" எவ்வளவு சோடியம் இருக்கிறதென்றும் தெரியவில்லை. நம்மூரில் பெரும்பாலான வீடுகளில் நைஸ் உப்பு எனப்படும் table/டேபிள் உப்பை விட கல்லுப்பே அதிகம் பயன்படுத்துவார்கள்.
நன்றி யோகன். இப்போது நீங்கள் நலமாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வீட்டிலே சமைக்கும் உணவுக்குள் இருக்கும் உப்பை நாம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால் வெளியிலே வாங்குகின்ற உணவுப் பொருள்களிலுள்ள உப்பைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நன்றி பெயரில்லா நண்பரே. மிக நல்ல விளக்கம் தந்தீர்கள்.
வைசா
சேதுக்கரசி,
நிறைய நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அவற்றில் நான் பார்த்த அளவில், கோஷர் உப்பு தூய சோடியம் குளோரைட்டைக் கொண்டிருக்கிறதாம். அதாவது வேறு "மாசுக்கள்" ஏதும் கிடையாது. அப்படியெனில், கோஷர் உப்பு 100% சோடியம் குளோரைட்டையே கொண்டிருக்கிறது. இது சரியென்றால், மற்ற உப்பை விட குறைவான அளவிலேயே கோஷர் உப்பை நாம் பயன்படுத்த வேண்டும்.
நன்றி சேதுக்கரசி.
வைசா
இன்னொரு விசயம்: கோஷர் உப்பில் அயோடின் இருக்காது என்று வாசித்தேன். Iodine ஒரு முக்கியமான சத்து. உப்பு வாங்கும்போது அயோடைஸ்டு உப்பு வாங்கச் சொல்கிறார்களே.
Very useful information indeed.
Very useful information indeed.
உங்கள் கருத்து என்ன?