நம்பினால் நம்புங்கள். உயரம் குறைந்த ஆண்களே பெண்களின் கண்களுக்குக் கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள். கால்கள் எந்தளவுக்குக் குட்டையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் பெண்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது.

இதென்ன புதுக் கதை என்று யோசிக்கிறீர்களா? இது இப்போது அல்ல. இதெல்லாம் லட்சக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய கதை. ஏறத்தாழ 40 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்து 20 லட்சம் வருடங்களுக்கு முன்பு வரையான காலப் பகுதியில் காணப்பட்ட மனித ஆண்கள் குட்டையானவர்களாகவே காணப்பட்டனர். மனித முன்னோடிகளான ஹோமோக்களுக்கு நேரடியாக முன்னோடிகளான ஒஸ்ட்ரலோபிதகஸ் இனத்து ஆண்கள் 4 அடி 6 அங்குலங்களும் பெண்கள் 3 அடி 9 அங்குலங்களும் உயரமுடையவராகவே வாழ்ந்தனர். இதற்குக் கூறப்பட்ட காரணம் அந்நாளில் காடுகள் நிறைந்த உலகில் மரங்களில் ஏறி நிலை தடுமாறாது இருப்பதற்குக் குட்டையான கால்கள் அத்தியாவசியமானவை என்பதாகும். மிக உயரமான மரங்களில் திரிகின்றபோது கீழே விழுந்தால் மரணம் தான். எனவே உடலின் நிறை மையம் முடிந்தளவுக்கு நிலத்திற்குக் கிட்டவாக இருந்தால் (அதாவது கால்கள் குட்டையாக இருந்தால்) நிலை தளம்பாமல் மரங்களில் உலவ வசதியாக இருக்கும்.

யூட்டா பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் காரியர் இதை முழுமையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அவர் அண்மையில் இது தொடர்பாக எழுதியுள்ள ஓர் ஆய்வுக் கட்டுரையில், "இந்த ஒரு காரணமே கால்கள் குட்டையாயிருப்பதற்குப் போதாது" என்கிறார். "எதற்காக 20 லடசம் வருடங்களுக்கு ஒஸ்ட்ரலோபித்துகள் குட்டையான கால்களையே வைத்திருக்க வேண்டும்?", என்பது அவரது கேள்வி. இத்தனை மிக நீண்ட காலத்திற்கு ஒரு உடலுறுப்பின் தன்மை மாறாது இருக்கின்றதென்றால் அதற்கு வேறு ஏதாவது முக்கிய காரணம் இருக்க வேண்டும். மேலும் "தற்போதைய வாலில்லாக் குரங்குகளை ஆராய்ந்தால், அவற்றின் கால்களும் குட்டையே. ஆனால் அவை மிகக் குறைந்தளவு நேரத்தையே மரங்களின் மேல் செலவிடுகின்றன."

பேராசிரியர் டேவிட் காரியர் கூறும் காரணமே வேறு: உடலின் நிறை மையம் முடிந்தளவுக்கு நிலத்திற்குக் கிட்டவாக இருந்தால் நிலத்தில் நிற்கும்போது உறுதியாக நிற்க முடிகிறது.
போட்டிக்காக அல்லது சண்டை என்று வரும்போது எதிராளியைக் கீழே வீழ்த்துவதற்கு உறுதியாக நிற்கும் குட்டைக் கால்கள் உதவுகின்றன. "கால்கள் குட்டையாக இருக்கும்போது, சண்டையிடும்போத உயாமான எதிராளியைத் தோற்கடிப்பது சுலபமாகிறது", என்கிறார் டேவிட் காரியர். இதுதான் பெண்களைக் கிறங்கடிக்க வைத்த ஆண்களது முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது.

இந்தப் புதிய எடுகோளை எப்படி இவர் முன்வைக்கிறார்? ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள், வாலில்லாக் குரங்குகள், பபூன்கள் எனப் பலதரப்பட்ட இனங்களிலிருந்து கால் நீளங்களையும் நிறைகளையும் எடுத்து, அவற்றினது சண்டையிடும் தன்மைகளை ஒப்பிட்டார். இதிலிருந்து, பின்கால்களின் நீளம் சண்டையிடும் தன்மைக்கு எதிர்மறையாகத் தொடர்பு டட்டிருப்பதாகக் கண்டுபிடித்தார். அதாவது, கால்களின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க, சண்டையிடும் தன்மை குறைந்து கொண்டு போவதை அவதானித்தார். கை நீளத்திற்கும் சண்டையிடும் தன்மைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் கண்டறிந்தார். மேலுள்ள இனங்களில் மனிதர்களைத் தவிர ஏனையவற்றில் ஆண்களை விட பெண்களின் கால்கள் நீளமானவையாகக் காணப்படுகின்றன.

மனிதர்கள் மட்டும் ஒரு விசேட வகையாகி விட்டனர். சண்டை பிடிக்கும் தன்மை எவ்விதத்திலும் குறையாவிடினும், கால்கள் நீளமாகிவிட்டன. இது ஒரு வகையில் தவிர்க்க முடியாததாகி விட்டது. எப்போதுமே நிலத்துலேயே இருக்க ஆரம்பித்த பிறகு, ஆபத்திலிருந்து தப்பி ஓடுவதற்கும் வேட்டையாடுவதற்கும் வேகமாக ஓடுவதற்கு நீண்ட கால்கள் தேவைப்பட்டன. டேவிட் காரியரின் இன்னொரு ஆய்வில், குட்டையான ஒஸ்ட்ரலோபித்துகள் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட பின்னரே ஹோமோக்களானார்கள் (மனிதர்களது முன்னோடிகள்) என்று கூறியிருக்கிறார்.
(படங்கள்: இணையத்திலிருந்து)
11 மறுமொழிகள்:
என் கால் நீளமாக இருக்கே!!
இப்ப என்ன செய்யமுடியும்?
யாரோடும் சண்டைபோடாமல் இருக்கவேண்டுமே!!என்ற கவலை வந்துவிட்டது.
:-))
நல்ல பதிவு, ஆனாலும்...
//நம்பினால் நம்புங்கள். உயரம் குறைந்த ஆண்களே பெண்களின் கண்களுக்குக் கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள்.//
அட போங்க.. நம்புறாப்பலயா இருக்கு? :-D
தலைப்பை பார்த்ததும் எனக்கு ரொம்பவும் வெக்கமாகி முகமெல்லாம் சிவக்க ஆரம்பித்து விட்டுதுங்களே!
ஏமாத்திட்டீங்களே!!!
நல்ல கட்டுரை.
பகிர்ந்தமைக்கு நன்றி வைசா.
உயரமானவரோ குட்டையானவரோ
How they carry themselves - அதில்தான் கவர்ச்சியே இருக்கு. இல்லையா?
வைசா!
அன்று எப்படியோ??இன்று காசுள்ளவர்கள் கவர்ச்சியானவர்கள் என்பது எழுதா விதி!!
அதனால் நான் கவர்ச்சியில்லாதவன்.
நல்ல சுவையான கட்டுரை. இதன் ஒலி ஒளி ஆக்கம் பார்த்துள்ளேன்.
நல்ல பதிவு.
நன்றி தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன் .
http://www.desipundit.com/2007/03/14/kuttai/
// என் கால் நீளமாக இருக்கே!!
இப்ப என்ன செய்யமுடியும்?
யாரோடும் சண்டைபோடாமல் இருக்கவேண்டுமே!!என்ற கவலை வந்துவிட்டது. //
குமார், நீங்கள் சண்டைக்குப் போஒகாவிட்டால் சரிதான் :-).
நன்றி குமார்.
நீங்கள் நம்பமாட்டீர்கள், சேதுக்கரசி. ஏனெறால் இப்பொதுதான் நிலைமையே வேறாகி விட்டதே. கவலைப்பட வேண்டாம் ;-).
நன்றி சேதுக்கரசி.
வைசா
நன்றி மாசிலா, ஸ்ரீதர் வெங்கட்.
// உயரமானவரோ குட்டையானவரோ
How they carry themselves - அதில்தான் கவர்ச்சியே இருக்கு. இல்லையா? //
உண்மைதான் ஸ்ரீதர் வெங்கட். நீங்கள் சொல்வது புரிகிறது. இதையும் பாருங்கள். அண்மையில் பிரிட்டனில் மக்களிடையே நடத்திய ஆய்வில், பெண்களது எந்த ஒரு அங்கத்தையும் கவர்ச்சியானதாக ஆண்கள் கருதவில்லையாம். பதிலாக எந்த அங்கத்தையும் எப்படி அசைத்து நளினம் காட்டுகிறர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறதாம் அதன் கவர்ச்சி :-))). இதனால்தான் குண்டான நடிகைகளது கவர்ச்சி நடன்மும் பெருவெற்றி அடைகிறதோ?
வைசா
யோகன்,
// அன்று எப்படியோ??இன்று காசுள்ளவர்கள் கவர்ச்சியானவர்கள் என்பது எழுதா விதி!! //
பெண்பதிவாளர்கள் என்ன் சொல்கிறார்கள் என்று பார்ப்போம் ;-).
நன்றி யோகன், dubukku.
வைசா
அருமையான கட்டுரை.
பகிர்ந்தமைக்கு நன்றி வைசா.:)
உங்கள் கருத்து என்ன?