விண்வீழ்கொள்ளிகள் என்றால் என்ன? வானத்தில் தெரிகின்ற விண்-மீன்கள் திடீரென்று விழுவது போல் தோன்றி மறைவது தான் விண்வீழ்கொள்ளிகள். சில சமயங்களில் அங்கொன்றும் இங்கொன்று மாகத் தோற்றும். மற்றும் சில வேளைகளில் இவை அடுத்தடுத்துத் தோன்றி மறையும், விண்மீன் மழை போல. ஆனால் இவை விண்-மீன்கள் அல்ல. விண்மீன்களால் ஏற்படுத்தப் படுபவையும் அல்ல. சரி. இவை ஏன் இப்படித் தோன்றுகின்றன? மின்னலைப் போல எங்காவது போய் விழுந்து தாக்குகின்றனவா?
அண்ட வெளியில் இருக்கின்ற பல்லாயிரக் கணக்கான விண் கல் துகள்கள் (குப்பைகள்) பூமியின் வளி மண்டலத்தினுள் பிரவேசிக்கும் போது வளி மண்டலம் கொடுக்கும் எதிர்ப்பினால் அத் துகள்கள் எரியத் தொடங்குகின்றன. இவவாறு விண் கல் துகள்கள் வளி மண்டலத்தில் எரியும் போது வெளியிடப் படும் ஒளியையே விண்வீழ்கொள்ளிகள் என்கிறோம். இந்த விண் கற்களிலே எவையாவது பெரியனவாக இருந்-தால், அவை பூமியிலே விழுவதற்கு முன்பு முழுமையாக எரிந்து விடுவதில்லை. இவ்வாறான கற்கள் பூமியை வந்தடைகின்றன. இத்-தகைய விண் கல் துகள்கள், பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை எங்கும் ஆங்காங்கே இருந்தாலும், சில இடங்களில் இவை கூடுதலாகக் காணப்படும். இதற்குக் காரணம் தூமகேதுக்கள் (வால் நட்சத்திரங்கள்). தூமகேதுக்களும் பூமியைப் போலவே சூரியனை சுற்றி வருகின்றன; ஆனால் ஒரு பெரிய நீள்வட்டப் பாதையில்! இவற்றின் பெரும்பகுதி முழுமையாக உறைந்து போன பனிக்கட்டிகளால் ஆனவை. இந்தத் தூமகேதுக்கள் சூரியனுக்கு அண்மையாக வரும் போது, சூரிய வெப்பத்தில் பனிக் கட்டிகளில் ஒரு பகுதி உருகி துகள்களாக உதிர்ந்து போகின்றன. இந்தத் துகள்களே தூமகேதுவின் வாலாகவும் அமை-கின்றன. இவ்வாறு வெளியாகும் துகள்களில் ஒரு பகுதியை தூமகேது தனது சுற்றுப் பாதையில் விட்டுச் சென்று விடுகிறது. மணல் துணிக்-கைகள் அளவு தான் இருக்கும் இந்தத் துகள்களின் அளவு. ஆனாலும் அவற்றின் வேகம் காரணமாக (60 km/s) இவை விண்வீழ் கொள்ளிகள் ஆகின்றன.
சூரியனைச் சுற்றிவரும் தூமகேதுக்களில் மிகப் பிரபலமானது ஹேலி தூமகேது. 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தூமகேது சூரியனுக்கு அண்மையில் வருகிறது. 2061ம் ஆண்டில் இந்தத் தூமகேது மீண்டும் சூரியனுக்குக் கிட்ட வரவிருக்கிறது. ஒவ்வொரு முறையும் சூரியனை அண்மிக்கும் போது 6 மீட்டர் அளவுக்கு பனிக் கட்டிகளை இழக்கின்றது. இந்த ஹேலி தூமகேதுவின் பாதையைப் பூமியானது ஆண்டுக்கு இரண்டு தடவை கடந்து செல்கிறது: ஒன்று மே மாதத்தில், மற்றையது அக்டோபர் மாதத்தில். இந்த இரு தடவைகளும் ஹேலி தூமகேது விட்டுச் சென்ற துகள்களினால் விண்வீழ்கொள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன.
எனவே இந்த மாதத்தில் கூடுதலான விண்வீழ்கொள்ளிகளை நீங்கள் பார்க்கலாம். அதிலும் அக்டோபர் 21ம் தேதியன்று இது மிகக் கூடுதலாக இருக்கும். இந்நாளில் பூமி ஹேலி தூமகேதுவின் பாதையை தாண்டிச் செல்கிறது. இந்த விண்வீழ்கொள்ளிகளைக் காண விரும்பினால், அதற்கு மிகவும் உகந்த சமயம் அதிகாலை.
5 :
அக்டோபர் 21,ஞாபகத்தில் வைத்துக்கொண்டேன்.
அனேகமாக ஊரில் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
தூபகேது!!கேட்டு ரொம்பநாட்கள் ஆகிவிட்டது.படம் போட்டு அசத்திட்டீங்க.
நல்ல தகவல் நன்றி
வைசா
அருமையான பதிவு. கலக்கல்...
தொடருங்கள்..
நல்லா எழுதியுள்ளீர்கள்
நன்றி.
வைசா
வித்யாசமான; விடயமுள்ள பதிவு. இந்தக் காலங்கள் ஐரோப்பாவில் மேகமூட்டம் அதிகம்; காணமுடியுமா???
யோகன் பாரிஸ்
நல்ல பதிவு.
இது பற்றி நான் எழுதிய அறிவியல் புனை கதைக் கவிதை:
பெருவின்கல் ஒன்று புவியை நெருங்க
நவிலத் துடித்த நிலா.
உங்கள் புதுப் பதிவில் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை.