இந்தப் படம் சர்வதேச விண்வெளி நிலையமும் விண்வெளி ஓடம் அட்லண்டிஸும் செப்டெம்பர் 17ம் தேதியன்று 13:38:50 GMT மணிக்கு சூரியன் மேல் செல்லும் போது பிரான்ஸின் நோமண்டி பகுதியிலிருந்து எடுக்கப் பட்டது. பூமிக்கு வருவதற்காக விண்வெளி ஓடம் விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து 50 நிமிடங்களில் இந்தப் படம் எடுக்கப் பட்டது. இதன் பின்னணியாக சூரியன் அமைந்துள்ளது. படத்தை எடுத்தவரின் பெயர்: Thierry Legault என்ற பிரெஞ்சுக் காரர். 5000 பவுண்டுகள் மதிப்புள்ள தொலைநோக்கி ஒன்று, சூரியனின் ஒளித் தாக்குதலைக் குறைக்கத் தேவையான ஒளிவடிப்புகளின் உதவியோடு இதற்குத் தேவைப் பட்டிருக்கிறது.
விண்வெளி ஓடம் அட்லாண்டிஸ் தன் 12 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அண்மையில் தான் பூமிக்குத் திரும்பியது. அதன் முக்கிய பணியானது விண்வெளி நிலையத்திற்கு 45 அடி நீளமான சூரிய ஒளி-வாங்கிகளைப் பொருத்துவதாக இருந்தது. 1998ல் ரஷ்யாவினால் உரு-வாக்கப் பட்ட இந்த விண்வெளி நிலையம் காலத்துக்குக் காலம் பகுதி பகுதியாக விண்வெளி ஓடம் மூலம் கொண்டு செல்லப் பட்ட உறுப்புகளினால் இப்பொழுது பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இங்கே தரப் பட்டிருக்கும் படம் எடுக்கப் பட்ட போது, விண்வெளி ஓடமும் விண்வெளி நிலையமும் பூமிக்கு மேலே 250 மைல்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. சூரியனோ பூமியிலிருந்து 9 கோடி 30 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. இருப்பினும், இவை இரண்டும் சூரியனின் மேற்பரப்பிலுள்ள தூசு போல தெரிகின்றன! சூரியன் அத்தனை பெரியது!
படங்களைப் பார்ப்பதற்குச் செல்லுங்கள்:
Picture is copy-righted. Reproduced with written permission from the owner.
0 :