சனிக்கோள் பற்றிய படங்கள்

சனிக்கோள் சூரியக் குடும்பத்திலே இரண்டாவது பெரிய கோளாகும். அதற்கு மிக அழகான வளையங்கள் இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த வளையங்கள் கோடானு கோடி துணிக்கைகளை கொண்டிருக்கிறன. கீழே தரப்பட்டிருக்கும் படங்கள் விண்வெளியிலுள்ள ஹப்பிள் தொலைநோக்குக் காட்டி, காஸினி விண்கலம், வொயெஜர் விண்கலம் போன்றவற்றின் துணையுடன் எடுக்கப்பட்டவை. இவை எல்லாமே இணையத்திலிருந்து தேர்ந்தெடுத்துள்ளேன்.




சனிக்கோளைச் சுற்றி சூரியன் நிற்கும் நிலையைப் பொறுத்து சனிக்கோளின் நிழல் வளையங்களில் விழுகிறது.


சனிக்கோளின் வளையங்களின் முக்கிய பகுதிகளைக் காட்டும் படம். ஹப்பிள் தொலை-நோக்குக்காட்டி ஊடாக எடுக்கப்பட்ட படம்.


உண்மையான வண்ணத்தில் சனிக்கோளின் முழு வளையத் தொகுதி: D வளையத்திலிருந்து F வளையம் வரை. படம் எடுத்தது காஸினி விண்கலம்.


சனிக்கோளின் வளையங்களில் காணப்படும் வெப்பநிலை மாறுபாடுகளைக் காட்டும் படமான இது காஸினி விண்கலத்தினால் எடுக்கப் பட்டது. நீலம் மிகக் குளிரான பகுதிகளையும், பச்சை குளிர்ந்த பகுதிகளையும், சிவப்பு சற்று வெப்பமான பகுதிகளையும் காட்டுகின்றன. இவற்றில் B வளையம்தான் மிகக் குளிர்மையானது.


D வளையத்தைக் காட்டும் இப்படத்தை எடுத்தது, வொயேஜர்-2 விண்கலம்.


காஸினி விண்கலம் எடுத்த C வளையத்தைக் காட்டும் படம்.

வொயேஜர்-2 எடுத்த வண்ணமூட்டப்பட்ட படமான இதில், நீல வண்ணம் C வளையத்தையும், மஞ்சள் வண்ணம் B வளையத்தையும் காட்டுகின்றன.

3 :

  1. Good Work.

    Keep Up.

  2. படங்கள் நன்றாக இருக்கின்றன. இந்த வளையங்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்.

  3. வைசா!

    அந்த வளையங்கள் பற்றி மேலும் அறிய நானும் ஆவலாக உள்ளேன். கண்டிப்பாக எழுதுங்கள்.
    நன்றி!