முஸ்லீம் பெண்கள் பர்தா அணியக் கூடாதென பிரிட்டனின் அமைச்சர்களில் ஒருவரான ஜாக் ஸ்ட்ரோ கூறியுள்ளது இங்கு பலத்த சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது. வேறு பல மதத்தினரும் இனத்-தவரும் பல்வேறு சின்னங்களையும் உடைகளையும் அணிந்திருக்கும் போது, இவர் முஸ்லீம் பெண்களை மட்டும் இலக்காக வைத்துக் கூறியுள்ளதற்கு பல முஸ்லிம் தாபனங்கள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன.
இது இப்படி இருக்க, என்னுடன் பணியாற்றும் சூடானைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் நணபரிடம் இது பற்றிக் கேட்டேன். முகம்மது நபிகளுடைய காலத்திற்கு முன்பிருந்தே அரேபிய நாட்டில் பர்தா அணியும் வழக்கம் இருந்து வந்ததென்றும், இந்த வழக்கம் ஒரு கலாச்சார முறையே தவிர ஒரு முஸ்லீம் பழக்கமல்ல என்று அவர் கூறினார். ஆகவே, முஸ்லீம் பெண்கள் பர்தா அணியவேண்டியது கட்டாயமில்லை என்றார். இது சரியா? அப்படியானால் அரபுக்கள் அல்லாத முஸ்லீம்கள் பர்தா அணிவது ஏன்?
14 :
படுதா or பர்தா?!
பொதுவாக ஜமுக்காளம் எனப்படும் மொத்தமான போர்வையையோ, சாக்குகளை ஒன்றிணைத்து தைக்கும் பெரிய சைஸ் தடுப்பானையோ படுதா என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன்.
முஸ்லீம்கள் அணிவதை பர்தா என்று சொல்லித் தான் கேள்வி.
விருப்பம் உள்ளவர்கள் அணிந்து கொள்ளட்டும். விருப்பம் இல்லாதவர்களைக் கட்டுப்படுத்தக்கூடாது.
சிக்கந்தெராபாத்தில் நான் பார்த்திருக்கிறேன் - கருப்பு என்று அல்ல - வித விதமான கலர்களில் அங்குள்ள இஸ்லாமிய சகோதரிகள் பர்தா அணிந்து கொள்கிறார்கள். அதோடு முகத்தின் முன்பு உள்ள திரையைத் தலைக்குமேலெ தூக்கி விட்டுக்கொண்டு முழு முகத்தையும் காட்டிக் கொண்டுதான் நடந்து செல்கிறார்கள்
பர்தா அணி அல்லது பர்தாவை எடு என கட்டாயபடுத்துவதுதான் அநியயாம்
வைசா, முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய வேண்டுமா என்பதை முஸ்லீம் பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
// கவலைதரும் விடயம் என்னவென்றால், பிபிசி நடத்திய கருத்துக் கணிப்பில் 95% பேர் பர்தா அணியக் கூடாது என்று கருதுவதாகத் தெரிகிறது.//
இந்தக் கருத்து பிரிட்டனில் மட்டும் இருப்பதாக நான் கருதவில்லை. உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு. நமது நாட்டிலும் உண்டு. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் மற்ற நாட்டுப் பெண்கள் அந்தந்த நாட்டு வழக்கத்தைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்பதற்கு மத, பண்பாட்டுக் காரணங்களைச் சொல்வதற்கு எல்லா நாட்டு ஆண்களும் தயாராக இருப்பார்கள். இதுதான் உண்மை. பர்தா அணியும் நாடுகளில் மற்ற மதத்து நாட்டுப் பெண்களும் பர்தா அணியத்தானே வேண்டியிருக்கிறது. நமது நாட்டிலும் வெளிநாட்டு உடைகளை பெண்கள் அணிந்து கொண்டார்கள் என்று சொல்லிக் கிண்டல் பதிவுகள் வலைப்பூ வரை வரவில்லையா? அடப் போங்கங்க....அடுத்தவன் கைதான் வீசுது. நம்ம கை சந்தனமுல்ல. மொத்தத்தில் வயித்தெரிச்சல்.
வைசா!
முன்பு ஒரு அமைச்சர்;வெளிநாட்டார் தங்கள் குழந்தைகளுடன் தம் தாய் மொழியில் வீட்டில் பேசக்கூடாதெனவும் கூறினார்; இதைத் தீர்மானிக்க இவர் யார்..???
இந்தப் பர்தா விடயத்திலும் ,இதை அணியும் பெண்கள் தீர்மானிக்கட்டும்.
தங்கள் நாட்டில் வாழும் வெளிநாட்டவரை அடிமைகள் என நினைக்கும் கோளாறே!! இது.
யோகன் பாரிஸ்
இன்னும் உங்கள் இரண்டு கேள்விகளுக்கும் பதில் வரவில்லையே.!
மற்றபடி தீவிரவாதத்தைத் தடுக்க முயலும் ஒரு செயலாகவே இதை நான் பார்க்கிறேன்.
"தாடி வைத்த ஒருவன் பிள்ளை பிடிக்கிறவன்" எனப் பயந்து தாடி வைத்து ஊரில் தென்பட்ட புது ஆசாமிகள் பல பேர் அடிபட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மேல் ஆழமான உறுதிப்பாடான சந்தேகம் தோன்றும் போது நிகழும் ஒரு செயல் தான் இது.
ஆனால், அவதிப் படுபவர்கள் என்னவோ அப்பாவி மக்கள் தான்!
அதுதான் சோகம்.
உண்மையில் பெண்கள் முகமெல்லாம் மூடி பர்தா போட்டுக் கொள்வதை விரும்புவதில்லை. பர்தா என்பது ஒரு அடையாளம், மற்றும் இஸ்லாமிய கோட்பாட்டின்படி அங்க அவயங்களை வெளிக்காட்டாமல் மறைத்துவிட உதவுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் முஸ்லிம் பெண்கள், ஜீன்ஸ் மற்றும் முழுக்கை டாப்ஸ், ஹை-ஹீல்ஸ் போட்டு அதனுடன் ஒரு ஸ்கார்ப் கட்டிக் கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் கோட்பாடையும் காப்பாற்றியாயிற்று அதே சமயம் நவநாகரிகமாகவும் உடையணிந்தாயிற்று. அதே பெண்கள் கொஞ்சம் வயதானவுடன் உடலை முற்றிலும் மறைக்கும் நீள அங்கி அணிந்து ஸ்கார்ப் கட்டிக் கொள்கின்றனர். ஆக முகம் மறைக்கும் வேலையே கிடையாது. ஜாக் ஸ்ட்ரா இந்தப் பிரச்னையை இப்படி அணுகியது தவறு தான். பெரும்பாலும், இவ்வாறு உடையணிபவர்கள் முதல் தலைமுறை குடியேறிகளாக இருப்பார்கள். ஒரு தலைமுறைதான் அப்படி இருக்கும் மறு தலைமுறையில் இதே மாதிரியான முகம் மறைக்கும் வேலைகள் இருக்காது என்பது திண்ணம்.
ஒரு நிகழ்வு நடந்ததும், ரகசிய மற்றும் புலனாய்வுத் துறையின் அறிவுரைக்கேற்ப அவ்வப்போது சில செயல்கள் செய்யப்படுவதுண்டு.
அதுபோல, இந்த எளிதாக காட்டிக்கொடுக்க முடியாத உடையின் மூலம் ஊடுருவலாம் என்ற தகவல் கிடைத்திருக்கலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன் எவ்வகைப் பானமும் எடுத்துச் செல்லக்கூடாது என விமான நிலையங்களில் ஒரு தடை விதிக்கப் படவில்லையா?
அது போலத்தான் இதுவும் இருக்கலாம்.
நம் நன்மைக்காகத்தானே செய்கின்றனர்.
இது கவலைக்குரியது; கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல என்பது என் கருத்து.
சவூதியில் பர்தா அணிய வேண்டும் என்று கட்டாய படுத்துகிறார்களே. எடு என்று கட்டாயப் படுத்துபவர்களை கண்டிக்கிறோம் ஆனால் போடு என்பவரை என் கண்டிப்பதில்லை
பர்தா அணிவது என்பது உண்மையில் யூதப் பழக்கமே. இப்படிப் பல கலாச்சாரக்கூறுகள் யூத மரபிலிருந்து முகம்மதால் எடுத்தாளப்பட்டுள்ளன.
ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.
எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் "செய்" என்றோ "செய்யாதே" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.
http://manaosai.blogspot.com/2004/12/blog-post_22.html
பரவாயில்லை அவுங்க போட்டுக்கொள்ளட்டும்.எதை கொடுத்தாலும் ஏன் என்று கேட்காமல் அப்படியே கடைபிடிப்பதை என்ன வென்று சொல்வது??
பெண்கள் அவயம் தெரியக்கூடாது என்றால் நாம் நம் கண்களைதான் மூடிக்கொள்ளவேண்டும் அடுத்தவர் மேல் துணிபோட்டு மூடுவது "முட்டாள் தனம்"
பேசுவது யாரிடம் என்று தெரியாமல் கூட பேசமுடியுமா?
அவுங்களா திருந்தினாத்தான் உண்டு.
பிறர் சொல்லி திருந்துவது என்பது கஷ்டம்.
உங்கள் அமைச்சர் கூட தன்னிடம் பேச வரும் போது தான் முகத்திரை விலக்கச்சொன்னதாக படித்தேன்.
எது உண்மை என்று தெரியவில்லை.