மேற்கு நாடுகளில் பிள்ளைகளது உடல் பருமன் கூடிகொண்டே செல்வது பலருக்கு கவலையை அளிக்கும் விடயமாகி வருகிறது. பிள்ளைகளுக்கான டிவி விளம்பரங்களை தடைசெய்யுமாறு ஆங்கிலிகன் சர்ச்சின் தலைமை பேராயர் கோரிக்கை விடுத்திருந்தார். அண்மையில் பிரிட்டனின் அமைச்சர்களும் பிள்ளைகளின் உடல் பருமன் கூடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறார்கள். ஏற்கனவே பிபிசி பிள்ளைகளுக்கான தனது நிகழ்ச்சி-களில் வரும் கதாபாத்திரங்களை சத்தற்ற உணவுகளை விற்பதற்குப் பயன்படுத்தக் கூடாதென தடை விதித்து விட்டது.
இந்த நிலையில், சத்தற்ற உணவுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக டிஸ்னி அறிவித்துள்ளது. தமது டிஸ்னி உலகம் மற்றும் பாரிஸிலுள்ள டிஸ்னிலாண்ட் ஆகியவற்றில் சத்தற்ற உணவுவகைகள் எதிர்காலத்தில் விற்பனை செய்யப்பட மாட்டா. அதற்குப் பதிலாக காய்கறிகளும் பழரசமும் விற்கப்படுமாம். டிஸ்னி படத்தில் அல்லது காட்டூனில் வரும் கதாபாத்திரங்களும் உப்புக்கூடுதலாகக் கொண்டிருக்கும் நொறுக்குத்தீனிகளதும் இனிப்புக் குடிபானங்களதும் விற்பனையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா. அப்படியாயின் இனிமேல் வின்னி த பூ பிஸ்கெட் என்றோ, இன்கெரிடிபிள்ஸ் டாட்ஸ் என்றோ பொருள்களை விற்பனை செய்யமுடியாது. தங்களிடம் வாங்கினால் டிஸ்னி கதாபாத்திரங்களின் வடிவங்கொண்ட பொம்மைகள் இலவசம் என்று விளம்பரம் செய்ய முடியாது. மக்டொனால்டும் ஹப்பி மீல்ஸ் என்று தங்கள் உணவு வைத்துத் தரும் பெட்டியில் டிஸ்னியின் படங்களெதுவும் போட முடியாது. மக்டொனால்டுடனான தனது 100 கோடி டாலர்கள் பெறுமதியான எட்டு வருடகால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது டிஸ்னி நிறுவனம்.

இந்தப் புதிய அணுகுமுறை சிறிது சிறிதாக அடுத்த 18 மாதங்களுக்குள் ஒவ்வொரு ஒப்பந்தமும் முடியும்போது அமுலுக்குவரும். சரி. இவர்கள் எப்படி சத்துள்ள உணவா அல்லது சத்தற்ற உணவா என்று பார்க்கப் போகிறார்கள்? 30%க்கு மேல் கொழுப்பு இருந்தால், 10%க்கு மேல் முதிர்ந்த கொழுப்பு இருந்தால், 10%க்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரை இருந்தால் அதை சத்தற்ற உணவாகக் கருதுவார்கள்.
டிஸ்னியின் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் கதைக்குள்ளேயே சத்தான உணவு பற்றியும் உடல் பயிற்சி பற்றியும் சேர்த்துவிடவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.எப்படியோ பிள்ளைகளை சத்தற்ற உணவுவகைகளை வாங்கத் தூண்டும் உபாயங்களில் முக்கியமான ஒன்று இல்லாமல் போகப் போகிறது. அந்த வகையில் இது எல்லாப் பெற்றோர்களாலும் வரவேற்கப் படவேண்டிய நல்ல செயல்.
(படங்கள்: இணையத்திலிருந்து)
2 :
வைசா,
ரொம்ப சந்தோஷமான செய்திங்க. எவ்ளோ பெரிய மாற்றம் கிடைக்கும் இதனால். யோசிச்சுப் பார்த்தா, நம்ம முடியாமா வருது. அட கடைசில அரசியலும், வியாபாரமும் தனித்தனின்னு குறைந்த பட்சம் உங்க ஊருலயாவது புரிஞ்சுகிட்டு குழந்தைகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த சனியன் பிடிச்ச வியாபார தந்திரத்தை குப்பையில போடுறாங்களே.
அமெரிக்காவில ரொம்ப வருஷம் ஆகுமுங்கோ...
நல்ல பதிவு வைசா.. இங்கே சென்னையில் இப்போது தான் சத்தற்ற குளிர்பானங்களை சத்துள்ள உணவுடன் சேர்த்துக் கொடுக்கும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது.. இதை எப்போ விடப் போறாங்களோ!