A380 விமானம் மேலும் தாமதமாகிறது!


ஏர்பஸ் நிறுவனம் 1400 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் உரு-வாக்கி வரும் உலகின் மிகப் பெரிய விமானமாகிய A380 உற்பத்தி செய்வது ஏற்கனவே ஓர் ஆண்டு தாமதமாகி விட்டது. இதன் உற்பத்தி மேலும் தாமதமாகும் என்று இன்று அறிவித்திருக்கிறார்கள். இதன்படி இந்த விமானம் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் வரை எடுக்கலாமாம்.

2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதலாவது A380 விமானம் தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கும்வரை தொடர்ந்தது. பலவகை சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்ட இந்த விமானம் கடந்த மார்ச் மாதத்தில் 850 பயணிகளும் 20 விமான ஊழியர்களும் 80 வினாடிகளில் விமானத்தை விட்டு வெளி-யேறி பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியமான சோதனையில் வெற்றி பெற்றது.
இந்த விமானத்தைப் பற்றிய சில தகவல்கள்:
நீளம்: 73m; இறக்கை விரிப்பு: 79.8m; உயரம்: 24.1m; கொள்ளளவு: பொதுவில் 555 பேர், ஆகக் கூடியது 853 பேர்; எஞ்சின்கள்: 4; பறக்கக் கூடிய தூரம்: 15,000km; வேகம்: ஒலியின் வேகத்தைப் போல் 85 வீதம். இவ்வாண்டு இறுதியில் வெளிவர இருந்த இந்த A380 ரக விமானத்தின் விலை 25 கோடி அமெரிக்க டாலர்கள்! இது வரை 159 A380 விமானங்கள் விற்கப்பட்டு விட்டன.

Emirates: 43; Lufthansa: 15; Qantas: 12; Air France: 10; Singapore Airlines: 10; FedEx: 10; International Lease Finance: 10; UPS: 10; Thai Airways: 6; Virgin Atlantic: 6; Korean Air Lines: 5; Etihad Airways: 4; Qatar Airways: 2; China Southern Airlines: 5; Kingfisher Airlines: 5; Malaysia Airlines: 6

இந்த செயல்திட்டத்தில் செலவுசெய்த பணத்தை மீளப் பெறுவதற்கு ஏர்பஸ் நிறுவனம் 250 A380 விமானங்களை விற்றாக வேண்டும். இதில் ஏர்பஸ் நிறுவனத்துக்கு இன்னும் நஷ்டம் வரவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த A380 விமானங்களை வாங்குவதற்கு முன்வந்த இந்த நிறுவனங்-கள் விமானங்கள் கிடைப்பது தாமதம் ஆவதால் அதற்கு நஷ்ட ஈடு கேட்கக் கூடும்.

2 :

  1. நல்ல பதிவு

    நன்றி

  2. வைசா!
    இவ் விமானத்தின் வெண்பறப்பில்;(குழம்பவேண்டாம்;ஓடினால் "வெள்ளோட்டம்" -இது பறக்குதே!!! அதுதான் வெண்பறப்பினேன்.) இங்கே என் பிரன்ஞ் நண்பர்;விமானம் பற்றி ஆய்வது பொழுது போக்கு -கூறினார். இவர்கள் செய்யும் வியாபார ஒப்பந்ததை இவர்களினால் ,குறித்த காலத்தில் முடிக்கமுடியாது. எனினும் நட்டத்தைக்கூட சுதாகரிப்பார்கள்; உள்ளரசியல் விளையாடும், எதுவும் நடக்கலாம்; இவர்கள் பின் உதிரிப்பாகங்களில் கூடக் "குதிரை-கயிறு" வியாபாரம் செய்யக்கூடியவர்கள். பொறுத்திருப்போம்.
    யோகன் பாரிஸ்