"என்ன? எதையாவது தொலைத்து விட்டாயா? என்ன தேடுகிறாய்?"
"யார்? நானா? என்ன வேண்டும்?"
"ஆமாம். நீயே தான். நீ கூகிள் தலைமுறை என அறிவாயா?"
"என் தலை முறையாகத் தானே இருக்கிறது??"
"தலை இருக்கிறதோ இல்லையோ, வால் நன்றாக ஆடுகிறது. திருமா திமுக கூட்டணியில் மீண்டும் சேர்ந்து விட்டது உனக்குத் தெரியுமா?"
"குழப்பாதீர்கள். நான் தேடுவது இன்னும் கிடைக்கவில்லை."
"அப்படியா? அது திராவிடர்களின் குமுறலாக இருக்கலாம். தமிழ் மணத்தில் தேடினாயா?"
"தமிழ் எப்படி மணக்கும்? மல்லிகை போலா ரோஜா போலா?"
"தமிழுக்கும் அமுதென்று பேர்."
"இதை எங்கோ கேட்டது போலிருக்கிறதே. கூகிளில் தேடுவோம்."
0 :