பிள்ளைகளுக்கான டிவி விளம்பரங்கள்

ஆங்கிலிக்கன் சர்ச்சின் தலைமை பேராயர், பிள்ளைகளுக்காகவென வெளியிடப்படும் டிவி விளம்பரங்களைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சமீப காலமாக பிள்ளைகளைப் பொருள்களை வாங்கத்தூண்டும் பல விளம்பரங்கள் இங்கு டிவியில் குவிந்திருக்கின்றன. இவர்களை நம்பியே பல கோடி டாலர்களில் தொழிற்சாலைகளே இயங்குகின்றன. இந்த விளம்பரங்களைப் பார்த்துப் பிள்ளைகள் கொடுக்கும் நச்சரிப்பைத் தாங்காமல் அவற்றைப் பெற்றோர் வாங்கிக் கொடுப்பதும் நடந்துவருகிறது. பேராயரோ இந்த முறையையே சாடுகிறார். பிள்ளைகள் மனதளவில் முதிர்ச்சியடைய முன்பே அவர்களை இம்மாதிரியான வியாபாரச் சூழலுக்கு இழுப்பது சரியல்ல. இதை இவ்வாறு தடை செய்வது ஒருவேளை பிரச்சனைகளைத் தீர்க்காதாயினும், இப்படி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்கிறார்.

எஸ்கே அவர்கள் பெற்றோருக்காக எழுதிவரும் தொடருடன் இது கொஞ்சம் சம்பந்தப் பட்டதுதான். பெற்றோர்கள் இந்த டிவி விளம்பரங்-களினால் வரும் தாக்கத்தை எப்படி சமாளிக்கிறார்கள்? இதைவிட கடைகளிலும் சிறுவருக்கான பொருள்களை கீழ்த் தட்டுகளில் வைக்கிறார்கள். பிள்ளைகள் இவற்றை எடுத்துப் பார்த்து வாங்கித் தருமாறு பெற்றோரை வற்புறுத்துவர். இந்தத் தாக்கங்களிலிருந்து நானும் விதிவிலக்கல்ல. ஆயினும், எஸ்கே அவர்களுடைய பதிவில் கூறியிருப்பது போல், பிள்ளைகளுடன் நட்புடன் இருந்தால் இவற்றை ஓரளவுக்குச் சமாளிக்கலாம். உங்கள் அனுபவம் எப்படி?

இந்தியாவிலும் இப்படிப் பிள்ளைகளைத் தூண்டும் விளம்பரங்கள் டிவியில் ஒளிர்கின்றனவா?

2 :

  1. இது உலகுக்கொத்த பிரச்சனை; கட்டாயம்- சிகரட் விளம்பரத்தடை மாதிரி இவற்றைக் கொண்டுவரவேன்டும்; உணவுப் பொருட்களால் பிள்ளைகள் வயதுக்கு மீறிய நிறையால் துன்புறுகிறார்கள்; அளவுக்கு அதிகமான விளையாட்டு உபகரணம் பற்றிய விளம்பரங்கள்; அவர்கள் கவனத்தைப் படிப்பில் இருந்து சிதைக்கிறது. பூனைக்கு யாராவது மணிகட்டுவார்களா????
    யோகன் பாரிஸ்

  2. உண்மை வைசா!
    வாசிப்பு,சகலதுக்கும் பின்னூட்டம் இப்படியே! கிடைக்கும் நேரத்தில் கழிவதாலும்; வாழ்வும் வயிறும் இருக்கே! அதனால் எழுதவில்லை .அத்துடன் மற்றவர்களை விட என்னத்தை எழுதிக் கிழிக்கப் போகிறாய் என மனது சொல்லுது. எழுதுத முயல்கிறேன்.கற்பகதரு 2 தரமுயல்கிறேன்.
    அன்பான ஊக்கத்துக்கு நன்றி
    யோகன் பாரிஸ்