இன்ஸமாமின் விசாரணை இன்று ஆரம்பம்

பாகிஸ்தான் அணித் தலைவர் இன்ஸமாமுக்கு எதிராக ஐசிசி சுமத்திய இரண்டு குற்றங்களுக்கான விசாரணை லண்டன் ஓவல் மைதான வளாகத்தில் இன்று ஆரம்பமானது. ஐசிசியின் ரஞ்சன் மதுகல்ல இந்த இரண்டு நாள் விசாரணையை நடத்துகிறார். இதன் முடிவு வெள்ளிக் கிழமையன்று தெரிய வரும். மடுகல்ல காலை எட்டரை மணிக்கே வந்து விட்டார். பாகிஸ்தான் அணித் தலைவரும் பயிற்சியாளரும் ஏற்கனவே வந்துவிட்டனர். அதன் பின்னர், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் கடமையாற்றிய நடுவர்கள் நால்வரும் வந்து சேர்ந்தனர்.

பந்தை ஊனப்படுத்தியதான குற்றச்சாட்டு நிரூபணமானால், அவருக்கு அபராதமும் ஒரு டெஸ்ட் அல்லது இரு ODI விளையாடத் த்டை விதிக்கப் படலாம். ஆனால், பந்தயத்துக்குக் களங்கம் விளைவித்ததான குற்றச் சாட்டு நிரூபிக்கப் படும் பட்சத்தில், அவருக்கு 2-4 டெஸ்ட்டில் அல்லது 4-8 ODI விளையாடத் தடை விதிக்கப் படலாம்.

இதில் சம்பந்தப்பட்ட பலரிடமிருந்து எழுத்து மூலமான சாட்சியங்களை மதுகல்ல பெற்றுள்ளார். இவற்றை விட, நிபுணர் சாட்சியங்களாக முன்னாள் இங்கிலாந்து ஆட்டக்காரர் போய்கொட் மற்றும் சைமன் ஹியூஸ் ஆகியோரையும் பாகிஸ்தான் அழைக்க இருக்கிறது.

எவ்வாறாயினும், இந்த விசாரணையின் முடிவுகளை எதிர்த்து இன்ஸ-மாமோ அல்லது ஐசிசியோ மேன்முறையீடு செய்யலாம். மீண்டும் ஒரு விசாரணை வரலாம்.

0 :