அபிஷேக் பச்சானும் ப்ரீத்தி ஜின்டாவும் இணைந்து நடிக்கும் ஜூம் என்ற படத்தை லண்டன் Chelsea Football Clubம் யஷ்ராஜ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதன் ஹீரோ ரிக்கீ இந்த Football Clubஇன் பரம ரசிகனாம். இப்படத்தின் சில பகுதிகள் Football Clubன் மைதானமான Stamford Bridge Stadiumல் படமாக்கப்படவிருக்கின்றன. அண்மையில் அபிஷேக் பச்சான், ப்ரீத்தி ஜின்டா, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்ய ராய், லாரா ஆகியோர் Chelsea Football Clubக்கு வருகை தந்து ஓரிரு ஆட்டங்களையும் பார்த்தார்களாம். அபிஷேக்குக்கு ரிக்கீ என்ற பெயர் பொறித்த ஒரு Chelsea Jersey கொடுக்கப் பட்டிருக்கிறதாம்.
இந்தியாவில் தங்களது பிரபல்யத்தை அதிகரிப்பதற்காகவே இந்த Football Club இந்தப் படத் தயாரிப்பில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே Manchester United, Liverpool Football Club போன்றவை தென்கிழக்காசியாவில் மிகப் பிரபலமானவை. இவற்றைப் போல் தாங்களும் பிரபலமாக வேண்டுமென்பதே இவர்களது அவா. ஆனால் மற்றைய அணிகளைப் போலில்லாமல் இவர்கள் படங்கள் மூலமாக இந்திய மக்களை அடைய நினைக்கிறார்கள். இந்தியர்களின் மனதில் மட்டும் இடம்பிடித்து விட்டால் போதும்; அவர்களுக்கு Football Club பொருள்களை விற்றே கோடிக்கணக்கான பவுண்டுகளைச் சம்பாதிக்கலாம்.
இரண்டு முறை அடுத்தடுத்து Premier League வென்றுவிட்ட Chelsea இப்போது மூன்றாம் முறை வெல்வதற்கு முயல்கிறார்கள். அடுத்த மே மாதமளவில் அவர்கள் வென்றார்களா இல்லையா எனத் தெரியவரும். அதே சமயத்தில் தான் இந்தப் படத்தையும் வெளியிடவிருக்கிறார்கள்.
0 :