பிள்ளைகளுக்கு கைத்தொலைபேசியைக் கொடுக்காதீர்!

கைத்தொலைபேசி பிள்ளைகளுக்கு மிகப் பயனுடையது. அவசர தேவைகளுக்கு அவர்கள் பெற்றோரை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம். அது போல, பெற்றோரும் பிள்ளைகளுடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள இது வசதியானது. மேலும், பிள்ளை-களினது கலந்துரையாடும் ஆற்றலை விருத்தி செய்யவும் கைத்தொலைபேசி உதவுகிறது. அண்மையில் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி, 12 வயதுக்குக் உட்பட்டோரில் 91 சதவீதமானவர்கள் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், பெற்றோரே கவனமாக சிந்தியுங்கள். இத்தகைய நன்மை-களைத் தரும் கைத்தொலைபேசியினால் பல தீமைகளும் உண்டு என்பதை மறவாதீர்கள். இக் கைத்தொலைபேசிகளிலிருந்து வீசப்படும் மின்காந்த கதிர்வீச்சுக்களால் உடலின் கலங்கள் (cells), மூளை, உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி போன்றவை பாதிக்கப் படலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், புற்று நோய் மற்றும் மூளை சம்பந்தமான நோய்களும் தோன்றக்கூடிய சாத்தியக் கூறுகளை இது அதிகரிக்கிறது. வளர்ந்தோருக்கே இம்மாதிரியான அபாயங்கள் இருக்கி-ன்றன எனில், சிறு பிள்ளைகளைப் பற்றிக் கூறத் தேவையில்லை. அவர்களுக்குத் தான் பாரிய பாதிப்பு இருக்கும். அத்துடன், கைத்-தொலைபேசிகள் பயன்படுத்துதலால் உருவாகக்கூடிய உண்மையான பாதிப்புகள் என்ன என்பதும் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன் தெரியப் போவதில்லை.

ஆகவே, உங்கள் பிள்ளைகளுக்குக் கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுக்கமுன், அதன் நன்மைகளையும் தீமைகளையும் பற்றித் தீவிர-மாகச் சிந்தியுங்கள். தீமைகளை விட நன்மைகள் முக்கியமானவையா? பெறக்கூடிய நன்மைகளுக்காக இந்தளவு அபாயங்களை, கேடுகளை எதிர்நோக்குவது சரியா? அந்தச் சின்னஞ்சிறு மூளைக்கு அத்தகைய கதிர் வீச்சு தேவைதானா? அந்தப் பிஞ்சுகளின் எதிர்காலத்தைப் பாதிக்க நாம் அனுமதிக்கலாமா?
அவசரத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த என வேண்டுமானால் வாங்கிக் கொடுக்கலாம். அத்துடன் அதில் பேசுவதை விட தகவலை அனுப்புமாறு அவர்களை ஊக்குவிக்கலாம். அதை விடுத்து எந்நேரமும் கைத்தொலைபேசியைக் காதில் வைத்தபடியே திரிவது அபாயகரமானது. பெற்றோரே கவனம்!

5 :

  1. 100% right.

  2. I thought, you would have covered societal impact of Handphones, like sexy SMS chats, porno MMS and illegitimate use of camera in the phone to expose privacy.

    hmm.... you need to think in that angle. Most of the time, the radiation, etc, etc, seems just sensational news.

  3. நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல எதற்கும் இரு பக்கம் உண்டு. இந்த நவீன காலத்தில் பிள்ளைகளை செல்லிடத் தொலைபேசி இல்லாமல் அனுப்புவது எவ்வளவு பாதிப்பானது தெரியுமா???
    எனக்கு பல தடவை ஆபத்து நேரத்தில் இந்த தொலைபேசி உதவியுள்ளது.
    தீமைகள் உண்டு என்பதற்காக அதன் நன்மைகளை மறந்து ஒரேயடியாக ஒதுக்குதல் நன்றோ????

  4. ரேடியேசன் போன்ற பலவற்றை காதுகளில் மாட்டிக் கொண்டு பேசும் head set மூலமாக தவிர்க்கலாம். ஆனால் அனானிமஸ் சொல்வது போல சில தொல்லைகளை கவனமாக செல் நம்பரை அடிக்கடி மாற்றுவது, செல் நம்பர்களை ரகசியமாக வைப்பது போன்றவற்றின் மூலம் தவிர்க்க வேண்டும். இது போன்ற குழந்தைகளுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டால் அதனை பிறருடன் discuss செய்ய வேண்டும் என்று கூட தோன்றாது இந்த விஷயத்தில் தான் மேலும் கவனமாக இருக்க வேண்டும்.

  5. வைசா!
    பிள்ளைகளுக்குச் "செல்பேசி" பயனா??? பந்தாவா??? ,என் நண்பர்களுக்கேற்ப்பட்ட அனுபவங்களை
    தனிப் பதிவாக்கலாமென நினைக்கிறேன்.
    மயூரேசன் குறிப்பிட்ட நாணய இரு பக்க உதாரணத்திலும் , வாழைப்பழமா? பலாப்பழமா? பயனதிகம் உதாரணம் மேல்; செல்பேசி- பலாப்பழம் போல் பயனற்றவை அதிகமுள்ளவை!!!!!
    செல் பேசியும் ,பிள்ளைகள் குறிப்பாக கல்விகற்பவர்களுக்குப் பயனைவிட; கவனச் சிதறலுக்கு; வழி கோலுவதே! அதிகம்....இது கசப்பான உண்மை.
    தவறேனத் தெரிந்தும் பல தவறுகளை நாம் விடுவது போல்;;தான் இத் தவறும்.
    யாராவது "செருப்பும் கையுமாக என்னைக் கலைக்கலாம்" ;உண்மை இது தான்.
    யோகன் பாரிஸ்