லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்-திலிருந்து லண்ட-னுக்கு வரும் பாதாள ரயில் (Piccadilly line) வண்டிகளின் முக்கிய பாகமொன்றில் வெடிப்புகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மொத்தம் 86 ரயில்களில் பதினைந்தின் சில்லு அச்சுக்களில் மேல் பொருத்தப்பட்ட பாகங்களில் இந்த வெடிப்புகள் காணப்பட்டன. இந்தப் பதினைந்து ரயில்களும் சேவையி-லிருந்து நீக்கப்பட்டு விட்டன.
ஆனால், மிகக் கவலை தரும் விடயம் என்னவென்றால், இந்த வெடிப்புகள் ஏன் ஏற்பட்டன என்று இன்னும் தெரியவில்லை. எதற்கும் அடுத்த முறை லண்டன் வந்து இந்த ரயில்களில் ஏறும்போது எச்சரிக்-கையாக இருங்கள். என்னை விடுங்-கள். ஒவ்வொரு நாளும் வேலைத்-தளத்துக்கும் வீட்டுக்கும் போய்வர இந்த ரயில்களை விட்டால் வேறு வழி. நீங்கள் எதற்கு இங்கு வந்து இதில் மாட்டிக் கொள்ள வேண்டும்.
1 :
// இந்த வெடிப்புகள் ஏன் ஏற்பட்டன என்று இன்னும் தெரியவில்லை. //
//ஒவ்வொரு நாளும் வேலைத்-தளத்துக்கும் வீட்டுக்கும் போய்வர இந்த ரயில்களை விட்டால் வேறு வழி. //
- இது இரண்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ? லண்டன் போலீஸிடம் நான் சொன்னதாகச் சொல்லி இந்தக் கோணத்தில் ஆராயச் சொல்லுங்கள் :)
படங்கள் நன்றாக வந்திருக்கு :)