ஒருவகை கற்றாழையிலிருந்து செயற்கைச் சர்க்கரைபோல் பயன்தரவல்ல ஒரு தேன் போன்ற பதார்த்ததை பிரித்தானியாவில் முதன்முறையாக ஒரு சூப்பர் மார்க்கெட் அறிமுகப் படுத்துகிறது. இதற்கு இதைத் தயாரிப்பவர்கள் வைத்த பெயர் Agave Nectar. இது சர்க்கரையைப் போல் உடனடியாக இரத்தத்தில் சேராமல் மெதுவாக உடலினுள் செல்கிறது என்பது இதன் சிறப்பம்சம். சர்க்கரையை விட தித்திப்பும் (நான்கு மடங்கு) அதிகம் கொண்டது இந்தப் பாகு. சர்க்கரை வியாதியுள்ளோருக்கு ஒரு வரப் பிரசாதம்.

சரி, இதற்குள் என்ன இருக்கின்றன?
Solids 74 - 76 %
Calories/100 gr. 320
Fructose 69 - 71%
Dextrose 23 - 24%
Inulin 3 - 5%
Sucrose 1.1 - 1.4%
இங்கு இனுலின் எனப்படுவது மிகச் சிக்கலான அமைப்புடைய ஒரு காபோ ஐதரேட். இந்த காபோ ஐதரேட்டை உடைக்கும் போது பிரக்-டோஸை முக்கியமாகக் கொண்ட பாகு கிடைக்கிறது. பிரக்டோஸ் என்ற சர்க்கரைப் பகுதி பொதுவாகப் பழங்களிலும் காய்கறிகளிலும் கிடைக்கின்றன. இது ஸுக்குரோஸை விட 50% தித்திப்பானது. இதனால் தான் Agave Nectar சர்க்கரையை விட மிகத் தித்திப்பானதாக இருக்கிறது.

எல்லாம் சரிதான். இதில் ஏதாவது தீமைகள் உண்டா என்றால், இது வரை தெரியவில்லை. வலைஞர்களில் யாராவது இதைப் பயன்படுத்தி இருந்தால் தங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன், மருத்துவ வலைஞர்களும் இதில் தீமைகள் ஏதாவது உண்டா என்று விளக்குங்களேன்!
2 மறுமொழிகள்:
வைசா,
உங்கள் படத்திலிருப்பது, சாம்பற் கற்றாழை என்றழைக்கப்படும் ஒரு வகை. இது இப்ப்டியே இருந்து விட்டு, 10-12 அடி உயரத்திற்கு வெறும் தண்டாக வளரக் கூடியது. யாழ்ப்பாணத்தில் இவை நிறைய உண்டு.
ஆனால், நீங்கள் கூறும் சர்க்கரைக் கற்றாழை வேறு என்று நினைக்கின்றேன். அது கொஞ்சம் சிறியது, அடர்த்தியான இலைகளைக் ( இலைகளா?) கொண்டது. இதில் சாறும், சோறும் உண்டு. இந்தக் கற்றாழை, எலும்பு நோவிற்குப் பாவிக்கப் படும் ஒரு மருந்து கூட. ஒரு பகிடி, அண்மையில் இந்தக் கத்தாழையை இங்கே கடைகளில் விற்பதைப் பார்த்தேன்.
வைசா,
நல்ல பதிவு.
நன்றி
உங்கள் கருத்து என்ன?