ஆஸ்திரேலியாவின் சுழல் பந்து வீச்சாளர் Shane Warne, தங்கள் அணிக்கு ஒரு பயிற்சியாளர் தேவையில்லை என்றும் ஒரு மனேஜர் இருந்தாலே போதும் என்றும் இன்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்:
ஒரு சர்வதேச ஆட்டக்காரர் என்ற முறையில், நாம் எவ்வளவு திறமை-யானவர் என்று எமக்குத் தெரியும். அதிகம் நுட்பமாகப் போவதற்கு ஒரு பயிற்சியாளர் தேவையில்லை.
இவ்வாறு இவர் சொல்கிறார். இது சரியா? அல்லது வழமை போல Shane Warneஇடமிருந்து வரும் உளறலா? உண்மையிலேயே இந்தியா போன்ற சர்வதேச தரம் வாய்ந்த அணிகளுக்கு பயிற்சியாளர் தேவைதானா?
இங்கிலாந்தைப் பொறுத்தவரை Duncan Fletcher பயிற்சியாளராக வந்த பின்னர் தான் இந்த அளவுக்கு அந்த அணி முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இது தற்செயலாகக்கூட இருக்கலாம். தரமான ஆட்டக்காரர்கள், முக்கியமாக நல்ல பந்து வீச்சாளர்கள், கிடைத்த-மையால் இங்கிலாந்து நன்றாக விளையாடுவதாக இருக்கலாம். ஆயினும், கடந்த ஆண்டு நடந்த Ashes தொடரில் Duncan Fletcherஇன் பங்கு மறுக்க முடியாதது. ஒவ்வொரு ஆஸ்திரேலிய ஆட்டக்காரருக்கு எதிராகவும் ஒரு திட்டம் வகுத்து அதை வெற்றிகரமாக Michael Vaughan மூலம் நிறைவேற்றி வைத்ததை மறக்க முடியாது. அப்படிப் பார்த்தால் பயிற்யாளரின் பங்கு முக்கியமானது. ஒரு வேளை ஆஸ்திரேலியா போன்ற மிகச் சிறந்த அணிகளுக்கு தேவையில்லையோ என்னவோ.
உங்கள் கருத்து என்ன?
1 :
இந்தியப் பயிற்சியாளர் Greg Chappel இந்திய அணியில் உருவாக்கியுள்ள கங்கூலி பிரச்சனையைப் பார்க்கும் போது, அவர் இந்தியாவுக்குத் தேவையில்லை. ஆனால் வேறு நல்ல பயிற்சியாளர் நிச்சயம் தேவை.