லண்டன் பாதாள ரயிலில் இரு மணிநேர தவிப்பு!

நேற்று முன்தினம் லண்டன் பாதாள ரயிலில் 900க்கு மேற்பட்ட மக்கள் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டனராம். மாலை ஒரு ஐந்தரை மணி-யளவில், யாரோ ஒரு பெண், வாழ்க்கையில் என்ன பிரச்சனையோ, ஒரு பாதாள ரயிலுக்கு முன்னே பாய்ந்து விட்டள். ரயிலில் அடிபட்டு கீழே விழுந்தவள் உயிருடன் இருந்ததால் அவளை மீட்டெடுக்க பாதையில் கொடுக்கப்படும் மின்சாரத்தைத் துண்டித்து விட்டார்கள். குகைகளுக்குள் அகப்பட்ட ரயில்களில் ஏறத்தாழ 900 பேர் இருந்திருப்பார்கள். ஒரே இருட்டு - அவசர விளக்குகளைத் தவிர. வெப்பநிலை வேறு அங்கே 30-35 டிகிரி இருந்திருக்கும். காற்றோட்டம் மிகக் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். ஒரே புழுக்கம்.

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பாதாள ரயில் குகைகளில் 45-50 டிகிரி வெப்பநிலை இருந்திருக்கும். நான் போய்க் கொண்டிருந்த ரயில் திடீ-ரென நின்று விட்டது. கதவுகள் முழுமையாக மூடிவிட்டன என்றவுடன் ஒரு சிக்னல் எஞ்சினுக்குக் கிடைக்கும். அதன் பின்னரே ரயிலை எடுக்க முடியும். அன்று என்ன நடந்ததோ, குகைக்குள் ஓடிக்கொண்டிருந்த ரயிலுக்கு இந்த சிக்னல் கிடைக்கவில்லையாம். நல்லவேளை நேற்று முன்தினம் போல் வெளிச்சம் இல்லாமல் போய் விடவில்லை. ஆனால் தாங்க முடியாத வெப்பம். புழுக்கம். ஒரே மக்கள் கூட்டம் வேறு. முப்பது நிமிட நேரத்தில் எப்படியோ ரயில் புறப்பட்டது அன்று.

நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தில், மின்சாரம் திரும்பி வர 6.50 மணியாகி விட்டது. இதற்குள் பயணிகள் மிகவும் தவித்துப் போய் விட்டனராம். மின்சாரம் வந்த பிறகும் ஒரு ரயில் ஸ்டார்ட் செய்ய மாட்டேன் என்று மக்கர் பண்ண, பின்னர் வேறு ஒரு ரயில் வண்டியை அந்த இடத்துக்கு அனுப்பி அதிலிருந்த பயணிகளை கிட்டவுள்ள ஸ்டேசனுக்குக் கொண்டு வந்த போது மணி இரவு 8.00!

இப்படி இருக்கிறது லண்டன் பாதாள ரயில் போங்கள்.

3 :

  1. Nanum Anth Newsai ketten.. Entha Tube Linenu konjam solla mudiyuma???

  2. ஏங்க வைசா
    இந்த மாதிரி சமயங்களில் செயற்கை காற்றோட்டம் ஏற்படுத்த வசதியில்லையா?

  3. ம்... எனக்கு ஒருதரம் தலை விறைத்து விட்டது போலிருந்தது.

    சும்மாவே எனக்கு இப்படியான விடயங்களில் பயம். சிறிய அடைக்கப்பட்ட இடங்கள் என்றால் எனக்கு மிகுந்த பயம். லிப்றினுள் கூட நுழைய மாட்டேன். 14வது மாடிக்கே படிகளில் ஏறித்தான் போனேன்.

    இங்கு ஸ்ருட்கார்ட் போகும் வழியில் ஒரு சிறிய குகை. ஒவ்வொரு தடவையும் அந்த சந்தர்ப்பத்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருப்பேன். லண்டனில் போல நடந்திருந்தால் எனக்கு என்ன நடந்திருக்குமோ தெரியாது.

    இனி, லண்டன் பக்கம் போனால் இந்தப் பயம் வேறு என்னைத் தொந்தரவு செய்யுமோ?