ஆஷஸ் தொடர் எதிர்பார்ப்பை திருப்திப் படுத்துமா?

நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் Ashes தொடர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது போல் விறுவிறுப்பாக இருக்குமா? இந்தத் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து அணியின் தலைவராக Andrew Flintoff தெரிவு செய்யப் பட்டிருக்கிறார். கணுக்காலில் இரு மாதங்களுக்கு முன்னர் ஆபரேஷன் செய்த பிறகு இன்னும் அவர் பந்து வீச ஆரம்பிக்கவில்லை. அடுத்த மாதம் இந்தியாவில் நடை-பெறும் Champions Trophy தொடரிலும் இவரே இங்கிலாந்தின் தலைவராக இருப்பார்.

Flintoff உட்பட சில முன்னணி வீரர்கள் இல்லாமலே Andrew Strauss தலைமையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இப்போதுதான் வென்றிருக்கிறது. Straussஐ ஒதுக்கி Flintoffஐ தலைவராக்கியது ஒருபுறம் இருக்க, ஆபரேஷனுக்குப் பிறகு முழுமை-யாக இன்னும் விளையாட ஆரம்பிக்காத Flintoff ஆஸ்திரேலியாவில் முழு தொடரிலும் விளையாடுவாரா? அதில் சந்தேகங்கள் இருப்பின், அவரை அணியிற் சேர்த்தது முறையா? இவர் மட்டுமில்லை. இன்னும் குறைந்தது மூன்று பேராவது காயப்பட்டிருந்து தேறி வருபவர்கள்: Ashley Giles, James Anderson & Liam Plunkett. அத்துடன், Marcus Threscothick வேறு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டார். இன்று Matthew Hoggard காயமுற்று விட்டார் என்றும், ஸ்கான் செய்து பார்த்ததில் தசைகளில் பாதிப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிகிறது. ஆயினும், நாளை மீண்டும் MRI scan செய்யப் போகிறார்களாம்.

இந்நிலையில் இங்கிலாந்தின் Ashes கனவு முடிவடைந்து விட்டது என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

1 :

  1. Strauss தலைமையில் பாக்கிஸ்தானிற்கு எதிரான வெற்றி (ஒருடெஸ்ட் வெற்றி - டேரல் ஹேர் உபயம்) இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இருந்தும் கங்காரூக்களை அதன் குகையிலேயே சந்திப்பதற்கு இந்த நம்பிக்கை மட்டுமே போதுமா என்றால் தெரியவில்லை. Flintoff வரவு ஒரு வரப்பிரசாதம் என்றே நம்புகிறேன்.