ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் மட்டும் 10 லட்சம் டன்னுக்கு மேலாக கார்பன் டை ஆக்ஸைட் வளி மண்டலத்துக்குள் போய் சேர்கிறது. எப்படி? பள்ளிக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கூட்டிப் போவதற்கும் வருவதற்குமாக 4,50,000 கார் பயணங்கள் நடக்கின்றன. இந்தப் பயணம் செய்வதில் நானும் ஒரு குற்றவாளி. காலையில் வேலைக்குப் போகும் போக்குவரத்து அதி கூடிய தருணத்தில் இது ஏறத்தாழ 20 சத வீதப் போக்குவரத்தாகும். அதிலும் இப்போது இங்கு எழுந்துள்ள 4x4 கார் மோகத்தினால் மாசுபடுதல் இன்னும் அதிகமாகிறது. ஏனைய சராசரிக் கார்களை விட மூன்று மடங்கு வளிமண்டல மாசுபடுத்தலை செய்கிறது இந்த 4x4 கார். நான் பயன்படுத்துவது மிகச் சிறிய கார் (அப்பா தப்பித்தேன்).
இந்த ஆய்வை நடத்தியது BP நிறுவனம். பள்ளிப் பயணங்களினால் வெளிவரும் கார்பனின் அளவுக்குப் பணம் தருமாறு இவர்கள் (BP) இப்போது பெற்றோர்களை ஊக்குவிக்கிறார்கள். இந்தப் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து அங்கு "தூய" மின்சாரத்தை உற்பத்தி செய்ய இருக்கிறார்கள். இதற்கான ஆரம்ப நிதியை BP நிறுவனமே முதலீடு செய்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது வெளிவிடப்படும் கார்பனின் அளவைக் கணிசமாகக் குறைக்கவுள்ளார்கள். இதுவும் நான் முன்பே விவரித்த கார்பன் வணிகம் போன்றது தான். எப்படியோ வளிமண்டல மாசு படுத்தலைக் குறைத்தால் சரிதான்.
1 :
விசா!
பழையபடி மாட்டுவண்டி தான் பிரச்சனையைத் தீர்க்கும் ஏனையவை யாவும் வெறும் சால்சாப்பே!
யோகன் பாரிஸ்